பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலைக்கண்ணாடியின் 14ன்னின்று தன்னை அலங்கரிப்பதில் ஈடுபட்டிருந்தாள், ஜானகி. கல்யாணராக ஆbாபனத்தை, அவளது உதடுகள் முனகிக்கொண்டிருந்தன. அவரது உள்ளத்தில் குதூகல. அலைகள் எழும்பிக் குதித்தவன் 23r, மிருந்தன. அந்தக் குதூகல அலைகளிலே, அவளது சிந்தனைப் படகு ஒரே ஒரு எண்ணாத்தைத் தாங்கிப் பாய் விரித்துச் சென்றது. "இன்றைக்குக் கூட்டிப் போவதாகக் கூறியிருக் கிறார்கள். அவர்கள் வந்ததும் எப்படியாவது இன்று போகவேண்டும்.". . . . . - ஜானகி, ராஜாராமின் - மனைவி. ராஜாராம் அவளை அடையக் கொடுத்துத்தான் வைத்திருக்க வேண்டும்; அவ் வளவு அழகி. நன்கு பழுத்துக் கனிந்த எலுமிச்சம்பழம் போன்ற மேனியுடையவள். ரொம்பவும் சிரமமெடுத்துச் செதுக்கிய சித்திரப் பதுமைபோல் இருந்தாள், அவள். அவளது யொவனம் நிறைந்த உடலில், அழகு பால் நுரைபோல நுரைத்துக்கொண்டிருந்தது.. அன்று அவள் தன்னை அலங்கரிப்பதில் ஒரு தனிக் கவனம் . எடுத்துக்கொண்டாள். வாசனைத் தைலத்தால் நனைக்கப் பெற்ற கருங்கூந்தலை ஜடை பின்னி, ஜிலேடாக் கொண்டை போட்டிருந்தாள். மதர்த்து, கர்வத்தோடு நிற்கும் கருவிழிகளுக்கு மை தீட்டியிருந்தாள்; வலைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/31&oldid=1270207" இலிருந்து மீள்விக்கப்பட்டது