பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

101



சிற்சில மதவாதிகளும், ஜாதி யூர் ஜிதக்காரர்களும், எம்மதமு மில்லா திருப்பவர்களுங்கூடி எங்களுக்கு புத்த தர்மம் சொந்த மல்ல வென்று சொல்லலாம். அது விவேக விர்த்தியாகாது. புத்தர் தர்மம் இந்தியாவிலுள்ளவர்களுக்கு சொந்தமேயாகும். எப்படியெனில் பகவன் புத்தர் பிறந்தது இந்தியாவில், அவர் தர்மம் போதித்தது இந்தியாவில். அத்தர்மத்திற்குச் சொந்தக்காரர்கள் இந்தியர்கள். அத்தர்மத்தை சிரமேல் சுமந்து சென்று அயல்நாடுகளுக்குள் பிரவர்த்தனஞ் செய்தவர்கள் இந்தியர்கள். அன்னிய நாடுகளை புத்த தர்மத்தால் விழிப் படையச் செய்து வைத்தவர்கள் இந்தியர்கள் ஆதலால் இந்தியர் களுக்குச் சொந்தமானது புத்த தர்மம். இத்தகைய சிறப்பு வாய்ந்திருந்த இந்தியர்கள் தான் தற்காலம் தங்கள் தெய்வ சுயசமதர்மமாகிய பவுத்த தர்மத்தை மறந்து "உழைப்பானுக் குழைப்பவன் ஜாதி வண்ணான்" என்றுரைத்து, அடிமை வேதங்களுக்கு, அடிமைகளாக்கி அன்னியத்தை சொந்தமென நம்பி, மோசம் போய்விட்டார்கள். சர்வ சுதந்தரங்களு மற்றார் கள் மத ஜாதிபிரிவினையடைந்தார்கள். தங்களுக்கு தாங்களே நசிந்தார்கள். நசிந்து வந்துக்கொண்டிருக்கின்றார்கள். இது பிரத்தியக்ஷம். இங்ஙனம் மடிந்துவரும் சகோதரிகளுக்கும் சகோதரர் களுக்கும், அவர்களுடைய சுய ரத்தினமாகிய சமதர்மத்தை நினைப்பூட்டி புநிதர்களாக நடக்க வைத்தலே! நம் நாட்டு , தருமராஜன் உபதேசமாகும். அவ்வுபதேசமே! எங்கள் பணியாகும். எங்கள் சகோதர சகோதரிகளின் முன்னேற்றமே எங்கள் நல்வாழ்வாகும் இதுவே சீர்திருத்தமுமாகும். சகோதர சகோதரிகளே! நம் பரத கண்டத்தில், ஜினன், ஆதிதேவன், தருமராஜன், விநாயகன் என்று வழங்கி வரும் புத்த சுவாமியின், அடியார்களாகிய, பவுத்தர்கள், பூர்வத்தில் எழுதி வைத்த ஞாபக தினங்களையே! பண்டு - ஈகை, பண்டைய ஈகை, பண்டீகை என்று அப்பவுத்தர்களால் தற்காலம் சொல்லி வழங்கி வரப்படுகின்றது. இது உலகோ பகாரிகளாக வெளிவந்த விவேகிகளின் நாட்களில் தேச சீமான்களால் ஏழைகளுக்கு அன்னதானமும், அறிவு உபதேசங்களும் வழங்கப்பட்டது. அக்கால் இது இராகுவன்