பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

102 க. அயோத்திதாஸப் பண்டிதர் உபகாரம். இது மாபலியன் உபகாரம் என்று பெயர் சொல்லப் பட்டது. அந்த ஞாபகப் பெயர்களே இக்காலம் இராகுலன் பண்டிகை மாபலி பண்டிகை என்று அன்னியர்கள் சொல்லி வருகின்றார்கள். இதுவே பண்டிகையின் இரகசியமாகும். இவ்விதமான பவுத்தர்கள் ஞாபக தினங்களுள், சித்தார்த் தன் துறவு. அல்லது மஹாராஜா துறந்த இராத்திரி என்ற ஞாபக தினமும் ஒன்றுண்டு. இது சித்தார்த்தர் உலகத்தார்க்காக, துறவு பூண்ட இரவாகும். அடுத்த நாள் முதற்கொண்டு சித்தார்த்தன் போலெனும் பாத்திரமேந்தினார். அக்காரணப் பெயரே கரபோலன் கரபோல் ஈசன் என்று சித்தார்த்தனுக்குச் சொல்லலாம். அதின் விவரம் கீழ்வருமாறு. சித்தார்த்தர் போலேந்திய விவரம். 2475 வருடங்களுக்கு முன்னம், வடஇந்தியாவிலுள்ள ஹிமா ஸைல சார்பில், நேபாள தேசத்தில், கங்கை நதியின் உபநதிகளில் ஒன்றாகிய ரோஹிணி (கோஹணா) நதியால் நிரம்பப்பெற்ற கபில வாஸ்து என்ற புண்ய க்ஷேத்திர மொன்றிருந்தது. பூர்வ அரச பரம்பரையில் வந்த சுத்தோதனன் என்ற அரசன் அந்த நகரத்தை ஆண்டு வந்தான் அவன் அதிக அன்பும் தயையும் சுத்த லாவண்யமு முள்ளவனாக இருந்தான் அதினால் அவனை மற்ற அரசர்களும் புகழ்ந்தார்கள். சர்வ பாக்யமும் பெற்ற தயாரூபிணியாகிய மாயாதேவி என்ற இராக்கினி அவனுக்கு மனைவியாக இருந்தாள். அவ்விருவருக்கும் ஒரு புத்திரன் பிறந்தான், அவனுக்கு சித்தார்த்தன் என்று பெயரிட்டார்கள். சித்தார்த்தன் செல்வ சுகத்துடன் வளர்ந்தான். அன்பே ஒருருவாக இருந்தான். தக்க வயதில் யசோதரை என்னும் மாதைக் காதல் மணம் புரிந்தான். சுகபோகத்துடன் வாழ்ந்து வரும்போது, சகல சுகபோகங்களு டன் தானும் தன் மனைவியும், தன் குடும்பங்களும் இருப்பது போலவே! தன் தேச குடிகளும் இருக்கின்றார்களா? என்று கருதி, ஒரு நாள் நகர தரிசனத்திற்குப் போனார். அங்கு பிணி, மூப்பு, மரணம் என்ற பயங்கரமான பெருந்துக்கங்களைக் கண்டார். தான் எவ்வளவு ஆனந்தசாகரத்தி லாழ்ந்திருந்தாரோ: அவ்வளவாயிர மடங்கு துக்க சாகரத்திலாழ்ந்து மனங்கசிந்தார்.