பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

103



ஊர்வலத்தை நிறுத்தி தன் கோயிலாம் அரண்மனைக்கு திரும்பிப் போய் துக்கித்து கொண்டிருந்தார். ஊண் உறக்கம் அற்றார் சுகபோக செல்வத்தை மறந்தார். துங்கங்களையே ஆபரணாலங் கிருதமென்று நினைத்துவந்தார் துக்கங்களைத் தடுக்கும் உபாய மெதுவென்று பலரைக் கேட்டு கேட்டு பலனற்றார். இதுகாலம் சொல்லி வரும் கதைகளெல்லாம் ஆபாசம் என்று திட்டப்படுத்திக்க கொண்டிருக்குங் காலத்தில், அழகு வாய்ந்த குமாரனை யசோதரைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு ராஹுலன் என்ற நாம மிட்டார்கள். இதனைக் கேட்டு இரட்டை துக்கம் நேர்ந்தது என்று திட்டப்படுத்திக் கொண்டு மனமயர்ந்திருந்தார் சித்தார்த்தர். சித்திரை மாதம் வசந்தகாலம் வந்தது, சித்திர மாத பெளர்ணமி நடு இரவில் தனது மனைவி, மகவு மற்றுமுள்ள சகல செல்வங்களையும் வெறுத்து, வெளிவந்தார் சித்தார்த்தன். சன்னா வென்னும் குதிரைப் பாகனை யழைத்து, தனது கண்டகன் என்ற குதிரையைக்கொண்டு வரச் செய்து, அதின்மேல் ஊர்ந்து, மும்மதில்களையும் தாண்டி காடு மலைகளைக் கடந்து, சூரியோதயத் திற்கு முன்னம் தனது தேசத்திற்கும் பிம்பிசாரன் தேசத்திற்கும் நடுவிலுள்ள அனோமா என்ற நதிக்கரைக்கு சன்னாவுடன் வந்தார். தானணிந்திருந்த சர்வாலங்கிருத பொருட்களையும், வஸ்திரங்களையும் கழற்றினார். வாளையுருவி தன் சிகையை கத்தரித்து கொண்டார். சன்னாவைப் பார்த்து நீ எனக்கு செய்த உபகாரத்தை யான் மறவேன். என் குதிரையுடன் இவ்வாபர ணங்களையும் என் பிதாவிடம் சேர்த்தருளும். உலகத்திலுள்ள துக்கா துக்கங்களைக் கண்டுணராமல் வீணே அரசனென்ற உருதாங்கி கீர்த்தியோடிருப்பதிலும் உலக மூடமயக்கங்களைத் தெரிந்து, உண்மை யுரைக்கும், பெரும் பாட்டையை மக்களுக்குக் காட்டி நிலைப்பது, பல மடங்கு பெருங் கீர்த்தியாகும். யான் கண்ட துக்கத்திற்கு நிவர்த்தி கண்டடைந்து, திரும்பி வரும் மட்டும், என்னை மறந்து இருக்கவும் எனது பிரிவு உலக முன் எச்சரிக் கைக்காகவும், உலக சர்வ மக்களுக்காகவும், நீதி நெறி நிறைவுக் காகவுமே என்றும், என் பிதாவிடம் தெரிவிக்கவும். ஒரு நாட்டைத் தாவிப்பிடித் தரசாள என்னை என் பிதா