பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

104 க. அயோத்திதாஸப் பண்டிதர் ஸ்திரப்படுத்தி வைத்தார். நான் கண்ட துக்கோற்பத்தியின் காரணம் இன்னதென்று கண்டடைந்து, வெற்றிப் பெறுவேனே யானால், இவ்வுலகம் முற்றும் அடங்க அரசு புரிவேன் என்று பின்னும் என் பிதாவுக்குரைப்பாயாக என்று சொல்லி குதிரைப்பாகனை அனுப்பிவிட்டார். அங்கிருந்து தான் கால்நடையாக, காடுகளிலும் முட்களிலும் நுழைந்து, பிம்பிசார வரசனால், செங்கோலோச்சி வரும், மகத தேசத்தின் ராஜதானியான ராஜ கிருஹம் என்ற நகரத்தை நோக்கிச் சென்றார். பல விடங்களில் இரந்துண்டார். தான் சித்தார்த்தன் என்று பிறர் அறியக்கூடாத ஏழ்மையில் இருந்தார். அன்பு நிறைந்த திருவுருவும், அருள் நிறைந்த முகமும், மிருதுவான வாக்கும் துக்கம் நிரம்பிய இருதயமும், பழக்க வழக்கங்களில் வெறுப்புடையவராகவும் விளங்கினார். இராஜ கிரஹ பிரஜைகள் கண்டு வாழ்த்தினார்கள். முடிவில் பிம்பிசார வரசனே தமது சேனாசைன்யத்துடன் வந்து, சித்தார்த்தருக்கு தக்க சமாதானம் கூறினான். அப்போதும் சித்தார்த்தர் மனந்தளராமல் நின்றார். அதனை யுணர்ந்து, "நீர் உலகில் வெற்றியடைவீராகில், அடியேனை தங்களுக்கு சிஷ்யனாக்கிக் கொள்ள ஞாபகமிருக் கட்டும்” என்று சொல்லி வணங்கிச் சென்றான். சித்தார்த்தர், உலக முன்னேற்றமாக தான் கண்டடைய வேண்டிய நிக்ஷயத் தில் கண்ணுங் கருத்துமாக இருந்து, கரபாத்திர மேந்தி பிக்ஷை பிறந்து ஜீவித்து வந்தார். இதுவே சித்தார்த்தர் கரபோலேந்திய சரித்திர சுருக்கமாகும். நிகழ் காலத்திரங்கல் மானிடராய் வந்து மரணமூப் புப்பிணியை தானறிய மும்மதிலைத் தாண்ட. லதிசயமே மண்மிசையில் வந்து மன்னாவுல காண்டுங் கண்ணினிய மாதைக் கடந்த ததிசயமே கடந்துமே மகவைக் கானகத்திற் சென் அடைந்த வோடேந்த வுகந்த ததிசயமே. உகந்துறைந்து கான லுள்ளம் வெதும்பா தகந்துறைந்தே வன்ன மகன்ற ததிசயமே. இவ்வாறாக சித்தார்த்தர் தனதரிய சுக சௌக்கியங்களைத் துறந்து, மனுஷர்களின் க்ஷேமங்களுக்காக, தானே மனங்கசிந்து,