பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

105



செங்கோலேந்த இருக்குந் தன்னருங்கரத்தில் ஒடேந்தி இரந்துண்டு உலகத்திற்கு உண்மை 2.ரைத்து வந்தார். இது நிக்ஷயமாகும். பிற்காலத்தில் சித்தார்த்தரின் பேரன்பைச் செவ்வென 2. ணர்ந்து, சர்வ பற்றுக்களு மற்று, மனதை ஒளி உருவாக்கி உலகத்திற்கே சதா சத்தியத்தைப் போதிக்கவரும் பவுத்த தர்ம துறவிகளுக்கு, மக்கள் அறியும் பொருட்டு, சீவர உடையும், அதனுடன் ஞான சூரியனாம், சித்தார்த்தர் ஏந்திய பாத்திரமும் துறவிகளால் அருளப்பட்டது. அது இக்காலமும் வழக்கிலுண்டு. பவுத்த துறவிகளை பிக்ஷ (பிக்கு = பிச்சைக்காரன்) என்றும், அவர்கள் போலுக்கு பிக்ஷாடன பாத்திரமென்றும், பாரம் பரியமாக வழங்கி, வந்துக்கொண்டிருக்கின்றது. இதுவே சித்தார்த்தர் கரத்தைப் போலாகவும், கரத்தில் போலேந்திய விவரமுமாகும். அன்பர்களே! அறிவி லடங்காத ஆபாசங்களைக் கைக் கொண்டு பொருள் கெட்ட பண்டிகைக் கொண்டாடல், விவேகமாமோ? சித்தார்த்த புத்தர் தான் கண்ட துக்கங்களை சகியாதவராய், நாடு முதல் மனைவி மகன், மற்ற யாவரையும் இரவில் துறந்து போனார். அக்காரணத்தால் நாம் பண விரயஞ் செய்து, பண்டிகைக் கொண்டாடி, பழியும் பாவமும் சம்பாதித்துக் கொள்வதோடு, நமது வாணாளையும் வீணாளாக் குதல் நியாயமோ? கர போலீசன் பண்டிகை என்று சொல்லி நாம் மதிமயங்கி விடலாமோ? இதைப் பண்டிகை என்று ஏற்று நடக்க புத்தர் எங்கேனும் கூறியிருக்கின்றாரோ? இல்லையே! சித்தார்த்தர் சத்தியத்தைக் கண்டு பிடிக்கத் துறந்த, புநிதமான நாளைக் கொண்டாடுவது, இக்காலம் நடக்கும் பண்டிகை என்னும் அவமானத்திலா? இல்லை. அன்பர்கள் ஒவ்வொரு சரித்திரங்களையும் பண்டிகைகளையும் முற்றும் விசாரித்து நிய மான வழியை வழங்குவதே அறிவுடைமையாகும். ஆதலால் சித்தார்த்தர் துறவடைந்து கையில் பாத்திரமேந்தி, இரந்துண்டு, உலகத்திற்கே சத்தியம் போதித்த பேரன்பையறிந்து, புத்த தேவனை, வழிபடுமாறு, சுதேச தெய்வ சுயசமதர்ம தூதர்கள் வேண்டுகின்றோம். கபோலீசன் ஆராய்ச்சி முற்றும்