பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முகவுரை சகோதரிகளே! சகோதரர்களே! உண்மைக்குத்தாரமாக, நம்மை நாம் திருத்திக்கொள்ள நினைத்தால் நம்மைப் பற்றி இருகக்கட்டி பிணைத்துள்ள எல்லா காரண காரியங்களையும் துருவித்துருவிப் பார்த்து, இது இன்னது இது இனியது, இது தக்கது இது தகாதது, என்று சாதிப்போமன்றோ ? ஏனென்றால் நமது உரிமை, நமது பெருமை என்பதில் அவ்வளவு அபேஷை உண்டு. ஒரு உரிமையை அடையவும் அதனால் தன்னை சுத்தப் படுத்திக்கொள்ளவும் அறிவுதான், ஆதியாகும். ஆகையால் நாம் கடவுளை அடைய, திருநீற்றால் நெற்றியை மட்டும் சுத்தப்படுத்திக்கொண்டு, தெருத்தெருவாகத் திரிந்தோ, அல்லது திரியா மலோரிடத்தில் ஒடுங்கியோ, இருந்து கொண்டு, வாக்காலுங் காயத்தாலும் பல பாபங்கள் செய்துவந்தால், நமது ரிமையாகிய கடவுளும், நாம் சுத்தப்படுத்திக்கொள்ள அணியும் விபூதியும் என்னச் செய்யும்? மனதில் கடவுள் இருக்கிறார். முகத்தில் விபூதி யிருக்கிறது. இவ்விரண்டு மிருப்பதாலன்றோ நாம பயப்படாமல் பாபஞ்செய்கின்றோம்? எப்பபடியும் நம்மை விபூதி கைவிடாது. சிவனே வந்து பவுத்தர்களை அழித்துள்ளார் என்ற விசுவாசம் எந்த நியாயங்களையும் விலக்கி அநியாயங் களில் நடக்கவைக்கின்றன. அந்த அநியாய நிமித்தமே சாம்பலை முகத்தில் பூசுகின்றார்கள். சாம்பலால் ஊமைப்பெண்ணைப் பேசவைக்கவில்லையா? அழியா சிவபிரான் அழியும் சாம்பல ணியவில்லையா? என்பார்கள். இவ்வித கதைகளில் கவனஞ் செலுத்தி மதி மயங்கி விபூதியை மருத்துவப்படுத்துதல் அறியாமையே! நாம் எத்தனையோ காலமாக விபூதி பூசிதான் வருகின்றோம். அத்தனைக் காலங்களிலும் ஒவ்வொருவருக்கு அடிமைப்பட்டுதான் வருகின்றோம். எந்த விபூதியும் நம்மை மீட்டுவைக்கவில்லை. அவ்வுண்மையை இந்நூலில் முற்றும் படித்து, பரிசுத்தர்களாகுவதே தேச திருத்தமாகும். 2475 ஆங்கீரஸu புரட்டாசி மீ" ஸ்ரீ சித்தார்த்தா புத்தக சாலையார்.