பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

விபூதி ஆராய்ச்சி

ஆசிரியர் க. அயோத்திதாஸ் பண்டிதர்.

அத்தியாயம் 1

வள்ளுவர்கள் கூறும் மாபூதி விவரம், வட இந்தியாவில் ஸாக்கா ஸாக்கை என்று வழங்குங் கூட்டத்தார்களுக்கு, தென்னிந்தியாவில் வள்ளுவர் என்றும் நிமித்தகரென்றும் அழைக்கப்படும். வள்ளுவர்களுடைய நிலைமையைப்பற்றி சிறிது முன்பே கூறியுள்ளது. அவர்கள் தென்னிந்தியாவில் சில பாகங்களில் ஊருக்கு வெளியே வசித்தவர்கள்; வசிப்பவர்கள். சென்னைக்கு அருகில் திருவளூர் என்ற கிராமமும் ஒரு ஆலயமும் இருக்கின்றது. வள்ளுவர்கள் ஒரு பழங்குடிகளென்று நம்பலாம். வட இந்தியாவில் எப்படி சிலர் இந்துக்களாகாமலிருக்கின்றார்களோ? அப்படி யே தென்னிந்தியாவில் இந்த சாக்கையர்களிருக்கின்றார்கள். இவர்களுடைய கொள்கை இக்காலத்தில் இவர்களிடமில்லை. இவர்களின்னாரென்றுந் தெரியவில்லை. இவர்கள் பெரும் பாலும் விபூதி பூசினவர்கள்; பூசி வருகின்றார்கள். நடு நெற்றியில் மூன்று கோடுகளும் அதற்கு கீழ் தாமரை மலர்போல் சிறிய கோடும் பூசுவார்கள். பூசும் முன்னால் சாம்பலைக் கையிலெடுத்து மாபூதியின் காரணத்தைப் பாடி தியானிப் பார்கள். அப்பாடலில் மாபூதி யுண்டாகிய சரியான காரணத்தை அறியலாம். அது குலகுரு சாக்கையரின் தேகமே சாம்பலானதென்று விளங்குகின்றன.