பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

112 க. அயோத்திதாஸப் பண்டிதர் மாயவரம் பாகுபலி நாயனார் ஏட்டுப்பிரதி ஸாக்கையர்கள் பாடிய மாபூதி பதிகம் பொன்னுடன் மண்ணும் பெண்முதல் வெறுத்த போதி நாதன் மா பூதி மன்னு முன் னரசர் மாதவர் போற்றும் வள்ளலா மாதி மா பூதி சொன்ன முன்பிடக சுருதிமெய் மொழியைத் தோற்றவைத் தோது மா பூதி நன்னில முனிவர்க் காதியாய் நின்ற நாயக னாகு மா பூதி. உள்ளமெய்ப் பொருளை யுரைத்துநால் வாய்மை யுணர்த்திய போத மா பூதி கள்ளமெய் யகற்றிக் காட்சியை யருள் கடவுளாய் நின்ற மா பூதி விள்ளுமிப் பூத வினையிரண் டாற்றி மிடியினை யகற்று மா பூதி தெள்ளற ஞானத் தெளிவதை யூட்டி சேவைதந் தாண்ட மா பூதி. அண்டர்கட் கோமானாகிய தன்றி யவனிக்கு மண்ணல் மா பூதி தொண்டர்க ளிதய துரிசினை யகற்றுஞ் சுத்தவா தார மா பூதி எண்டிசை யோர்க ளிதயசுத் தத்திற் கேமமே யோது மா பூதி பண்டுள மோன பாக்கிய மீந்த பக்குவ மான மா பூதி. பக்குவம் பழுக்கும் பான்மையீ தென்னும் பரிமள வேதி மா பூதி திக்குக ளெட்டுங் கோணநா னான்குஞ் சீர்பெறச் செய்த மா பூதி மக்களு மனையு மாய்கையென் றாற்றி வாய்மை நான் கூட்டு மா பூதி தக்க மெய்ப்பருவ பால தானத்திற் றன்னறி வளர்த்த மா பூதி. 2