பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

113


தன்னையே யுணர்ந்து தன்னையே யடைந்து தானேதா னான மா பூதி மன்னவ னென்னும் வாழ்க்கையினின்றும் வருத்துமென் றகன்ற மா புதி தன்னுயி ரீந்து பிறவுயி ரோம்பும் மன்னுயிர் முதல்வன் மா பூதி அன்னமு மாடை யாதுலாக் கீய வாக்கியா பித்த மா பூதி. வாக்கிய நான்கும் வழிபடு மாறு மாதவ முணர்த்து மா பூதி ஆக்கிய நீதி நெறிதனினின்று அன்பினை வளர்த்த மா பூதி போக்கிலே சிந்தை போகவிடாது பூரண முற்ற மா பூதி சாக்கைய முநிவ னாகுமெம் பெருமான் சாரணர் போற்று மா பூதி சாரணர் போற்றுந் ததாகத னாகும் சம்புவே சங்க மா பூதி காரணமானக் கடவுளாமெங்கன் கற்பகக்காட்சி மா பூதி பூரண ஞானம் பொலிந்துகே வலமாண் புணர்ந்த போதத்தின் மா பூதி சீரண முற்றோர் செயலுற வந்த தேவாதி தேவ மா பூதி. தேவாதி தேவ னென்னுமெய் யடியார் தேட்டமே நாட்ட மா பூதி மூவாமு தல்வ னெனமறை சாற்றும் முத்தனேயாகு மா பூதி காவாதளிக்குங் கண்ணுத லென்னுங் கருணையோ ருருவ மா பூதி பாவா வெனுஞ்சொல் பற்றிய போதே பற்றினையறுக்க மா பூதி. பற்றினை யறுத்துப் பற்றிய நீதிப் பற்றினைப் பற்று மா பூதி உற்றமெய்ஞ்ஞான விளக்கினை நாட்டி யுள்ளொளி விளக்கு மா பூதி