பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

10 114 க. அயோத்திதாஸப் பண்டிதர் கற்றறிந்தோராம் மெய்யறி வாளர் கண்ணினுண் மணியா மா பூதி முற்றிய ஞான வாழ்க்கையி னிற்போர் முத்தமிட்டாடு மா பூதி. முத்தமிட்டாடு முதல்வனா மெங்கள் முநிவன தாகு மா பூதி சித்தத்தே நிற்கும் ஜெயகுல குருவாந் தேற்ற்ற வாழி மா பூதி அத்தனா மெங்க ளருகனா மூல வரசனாய் நின்ற மா பூதி முத்திய தாகும் பரிநிரு வாண மோக்கமே யாகு மா பூதி. வள்ளுவர்கள் தங்கள் குரு தேகத்தையோ தேக சாம்பலையோ மாபூதி என்று பாடியுள்ளார்கள். மாபூதி தங்கள் கையிருப்பிலிருக்கும் நாள் மட்டும் அதை மாபூதி எனக் கூறிவந் தார்கள். அது முற்றும் முடிந்தபின்பு, இதுகாலம் பூசி வந்த மாபூதி பழக்கத்திற்கு விரோதமாய் வெறு நெற்றியாக இருக்க வெட்கப்பட்டும், தங்கள் குல குருமேல் வைத்திருந்த அன்பும், அவரை தினந்தோறும் மறவா சிந்தனையும், மாறிப்போகுமே என்ற விசாரத்தால், கல்வியற்ற சிற்சில வள்ளுவக்குடிகள், ஒருவருக்கொருவர் காணாமலே, வெள்ளை யடையாளம் விளங்க அடுப்பு சாம்பலையே ரகசியமாய் உபயோகித்து வந்தார்கள். இவர்களிடத்தில் இன்னும் மாபூதி இருப்பதாகவே ஒருவருக் கொருவர் திட்டஞ் செய்து வந்தார்கள். நாளுக்குநாள் பொய் மாபூதியை அறிந்து, பசுவின் சாணத்தை யுலர்த்தி சுட்டெரித்து, உபயோகித்து வந்தார்கள். ஒவ்வொரு வரும் சில மாதங்கள் பொய் மா பூதிக்கே மேற்படி பதிகம் பாடி தியானித்து வரலாயினர். எப்போது, மாபூதிக்கு பிரதியாக எருமுட்டைச் சாம்பலை உபயோகித்தார்களோ! அப்போதே இது குரு தேகத்தைச் சுட்டெரித்த மாபூதியல்ல. இது சாணச் சாம்பல், அடுப் பஞ்சாம்பல் என்று வெளிப்படையாகத் தெரிந்து கொள்ள மாபூதி என்னும் மகத்துவப்பெயரை மாற்றி, விபூதி என்னும் பெயரை வழங்கி வரலாயினர். இதுவே இக்காலமட்டும் வழக்கிலிருக்கின்றன.