பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

115



ஜீவகசிந்தாமணி முத்தியிலம்பகம் கைப்பொடி சாந்தமேந்தி கரகநீர் விதியிற் பூசி மைப்படி மழைக ணல்லார் மணிசெப் பின்வாச நீட்ட செப்படு பஞ்ச வாசந் திசையெல்லாங் கமழ வாய்க்கொண் டொப்புடை யுருவர் கோயில் வணங்குது மெழுகவென்றான். முற்காலத்தில் மாபூதிக்கிருந்த பெருமை, இப்போது சைவர்களும் லிங்காயிதர்களும் பூசிவரும் சாம்பலில் இல்லை என்று அதின் பெயர ளவாலேயே தெரிந்து கொள்ளலாம். சூடாமணி நிகண்டு தொகுதி.6 பாட்டு.20 அடலைவெண் பலிசாம் பற்ப ராந்திரு நீறே பற்பம் பொடி யொடு வீபூதி காப்பாம் புண்ணிய சாந்தஞ் சாணி பொடிதுகள் சுண்ணந் தூளி பூழியே புழுதி யாகுஞ் சுடுசுண்ணச் சாந்து மண்ணாம் கதையொடு களப மும்பேர். இதுவே முதன் முதல் மாபூதிக்கு பிரதியாக, வள்ளுவர்கள் விபூதியணிந்த விவரமாகும். இவ்விதம் சதா விபூதியோ சாம்பலோ சுண்ணாம்போ பூசவேண்டுமா? சில நாளைக்குத் தான் வணங்கவேண்டுமா? மாபூதி யில்லாத போது சாம்பல் பூசாமலிருந்தால் குற்றமா? மாபூதி பூசாமல் தங்கள் குருவை சிந்திக்கக்கூடாதா? மாபூதியைப்போல் சுண்ணாம்பு பூசுதல் பொய் மரியாதை யல்லவா? என்ற பகுத்தறிவு அவர்களுக்குள் எவருக்கும் எழவில்லை. விவேகிகளும் அவிவேகிகளும் ஒன்றாக சுண்ணாம்பு பூசிக்கொண்டார்கள். இவ்விதம் தங்கள் குரு சாம்பலுக்கு சமமாக அடுப்பஞ் சாம்பலை ஏற்றுக் கொண்ட, பேதை சாக்கையார்கள், பூர்வமான தங்கள் நன்னிலையையும், குல குருவையும், அவர் வழிபாடுகளையுந் துறந்து, மாபூதியின் மருத்துவத்தையும், விபூதியின் விளக்கத்தையும் மறந்து, அரசர், வணிகர். வேளாளர் என்ற முத்தொழிலாளர் கட்குங் கன்ம குருக்களாயிருந்த தங்கள் குரு பரம்பரையையும், ஜோதிட முதலிய நூற்களை எழுதியோதும் ஸாஸ்திரி பட்டத்தையும், பைய பைய கை நெகிழவிட்டு பஞ்சமா பாதகங்களுக் காளாகி, சாங்கியம் சடங்கு என்ற மூட கொள்கையில் நுழைந்து, ஜாதி வருணம் என்ற குப்பையில் புரண்டு, நாங்கள் தான் வள்ளுவர் என்று கூறி, பதின்மூன்று பறையர்களுள் இவர்களுமோர் பறையராக விருந்து, ஒடுங்கிக்கொண்டு வருகின்றார்கள்.