பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

116 க. அயோத்திதாஸப் பண்டிதர் இதுவே வள்ளுவர்களென்னும் சாக்கையர்கள் வழங்கி வந்த, தங்கள் குல குரு தேக சாம்பலாகிய மாபூதியின் விவர மாகும். மக்கள் நெற்றியிலணிந்துவந்த மாபூதிக்கு காரணமாயி ருந்தவர், தங்கள் குருவென்பது வள்ளுவர்களின் பதிகம் அறிவிக்கின்றன. விவேகிகள் ஆய்ந்தறிதல் கடனாகும். இனி இரண்டாவது விபூதியை ஆராய்வோம். அத்தியாயம் - 2 திருநீற்று விபரம் சிவ மதத்தோர்களும் லிங்க மதத்தோர்களும் பிரம்ம மதத்தோர்களும் நீறணிவார்கள். நீறு சிவன் அடையாள மாகவும், குங்கம் அல்லது செந்தூள் சிவணி அடையாளமாகவும் சேர்த்துத் திருமண் என்று வைஷ்ணவர்கள் அணிவார்கள். வெள்ளை விபூதியும் சிவப்பு குங்குமும் சேர்த்து சிவ-சக்தி என்று சைவர்கள் சொல்வார்கள்; அப்படியே பூசுவார்கள். விபூதி. சிவனால் விஷ்ணுவால் பிரமனால் உண்டாக்கப்பட்டதென்றோ அல்லது சிவனே விபூதியாய்விட்டார் என்றோ எந்த நூலிலும் பிரித்துரைத்ததில்லை. பொதுவாக விபூதிக்கு வேண்டிய மட்டும் சிறந்த மகிமையைக் கொடுத்து வந்துள்ளார்கள். ஆதலால் விபூதி மேலுலக தேவர்களுக்கும், கீழுலக தேவர்களாகிய பார்ப்பனர் களுக்கும், இந்து மதத்தினர்களுக்கும் பொது பொருளாகும் என்பது துணிபு. தாழ்ந்த ஜாதியாகிய தோட்டி முதல் உயர்ந்த ஜாதியாகிய இந்துக்கள் வரையிலும் விபூதியணிவார்கள். பூதேவர் முதல் ஊர்த்துவலோக எல்லா தேவர்களும், மும்மூர்த்திகளும், திருநீறணிவார்கள். இதனால் திருநீறு, தேவாதி தேவர்களுக்கும் நன்மை பயக்கத்தக்கதான ஒரு தனிப் பொருளென்பது அறிவுடைமையாகும். ஒரு நூலில் மும்மூர்த்திகளே திருநீறு. இன்னொன்றில், மும்மூர்த்திகளும் அவர்களின் மனைவிகளுமே திருநீறு, மற்றொன்றில்; சிவன், சிவனுடைய அருள், சிவனுடைய வல்லபம், சிவனுடைய மகத்துவம், சிவனுடைய சத்தியம், சிவனுடைய கைப்பொருளென்றும் பலவாறாகச் சொல்லி வைக்கப்பட்டுள்ளது. இதெல்லாமல் சிவனுக்கிருக்கும் பெருமை