பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

117



யிலும் சிறந்து விளங்குவது விபூதி என்பர். சிவனுக்கு பிரதியாக இந்த திருநீற்றுக்குக் கும்பிடு போடுவார்கள். காலமெல்லாம் சிவனை நினைக்காமலிருந்து சாங்காலம் சிவனே என்றால் எப்படி ரக்ஷிப்படைகின்றார்களோ அப்படியே செத்த பிரேதத்தின் மேல் இந்த திருநீற்றைப் போட்டால் உடனே கைலாய மோக்ஷம் கிடைத்துவிடுகின்றதாம். நீற்றை நுதலில் பூசிக் கொள்வதல் லாமல் வாயில் போட்டு தின்பார்கள். உலக ரக்ஷகராகிய சிவன் திருநீற்றைப்பூசி வருகின்றார் என்று ரூ பிப்பார்கள். நீறு பூசி வருவதால் அடையும் பலாபலனை சைவர்களுடைய நூற்களில் காண் பதல்லாமல். நீறு பிறந்த காரணம் அந்நூற்களில் காணப்படவில்லை. கடவுளைக் காணாவிட்டாலும் ரூ பங்கள் செய்வதில் குறைவில்லை என்பது போல். விபூதிக்கு உற்பவங் கூறாவிட்டாலும், அதின் சக்தியைச் சொல்லி வருவதில் சைவர்கள் பின்னடைந்ததில்லை என்றே நம்பலாம். உலகில் உள்ள ரூபங்களுக்கு அழகு இல்லாவிட்டாலும், கொடியர்களைக்கொல்ல வேண்டுமானாலும், உடலில் யாதா மொரு வியாதி உண்டானாலும், பக்தர்களை நரகத் திற்றள்ளாது சத்ய லோகத்தில் சேர்ப்பிக்க வேண்டுமானாலும், இந்த திருநீறு செய்யவல்லதாம். திருநீற்றுப்பதிகம் கொண்ட கொண்டிட்டவெகு சொரூபங்களுக் கழகு கொடுக்கச் சமைத்த நீறு கொடிய வெண்ணாயிரஞ் சமணரைக் கழுவினிற் கொலை செய்து கண்ட நீறு. விருத்தாசலப் புராணம் விபூதிச் சருக்கம் பாட்டு.14 நீறு புனைவார் வினையை நீறு செய்தலாலே வீறு தனி நாமமது நீறென விளம்பும் சீறு நரகத்துயிர் செலாவகை மருந்தாய்க் கூறுடைய தேவி கையில் முன்னிறை கொடுத்தார். இவ்வாறாக விபூதிக்கு பேராதரவு கொடுத்தவைகளை பக்தர்கள் பார்த்து, தாங்களும் புகழ்ந்து புகழ்ந்து மும்மூர்த்தி களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும், கொடுத்துள்ள, வலிமை யிலும் வலிமை, திருநீற்றுக்குண்டெனச் சாதித்து அவ்விபூதியின்