பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

118 க. அயோத்திதாஸப் பண்டிதர் மகிமையால், பிறரை துவேஷிக்கின்றார்கள். இன்னமும் துவேஷித்து வருகின்றார்கள். அத்தூஷணைக் கவிகளில் மூன்று ஈண்டு உதாரணமாகத் தருகின்றோம். விலக்ஷணானந்தர் பாடிய விபூதி மகிமை. திருநீ றணியாத் திருடர்களே! தினமுந் தினமுமதை யணிந்து அருவா யுருவா யருவுருவா ய்கமாய்ப் புறமா யகம் புறமாய் பரிமா தவனுங் காணாத பகவ னொருவன் சிவ மாகுங் கருவாலுதித்த காரணத்தைக் கண்டஞ் செய்ய வல்லீரே! ஒங்கா ரத்தா லறியாத வுளவு காணாத் திருநீற்றை வாங்கா மந்த மானுடர்காள் வந்தா லுதைப்பேன் காலாலே தாங்காச் சடையான் திருநீற்றைத் தானாயணிந்த தற்பரர்க ளேங்கா ரேங்கா ரேங்கார்க ளேங்கா ரென்றே யேங்குவனே! வாயால் மனத்தா லறியாத வாணா ளருந்திரு நீற்றைப் பேயே யென்னமனம் பதைத்துப் பிதற்றுகின்ற பேதையரே நாயே யாகாரி யாக நண்டா யாகநா டாக வீயா திருக்குந்திரு நீற்றை விதமா யணியவேண் டுவனே. விபூதி என்ற பெயராலும், திருநீறு என்று சாம்பலாலும், தங்கள் மதிமயங்கி பலர் பாழடைந்துள்ளார்களென்பது, மேற் குறித்த மூன்று விருத்தங்களால் விளங்கும். அவர்களுக்குள்ள பொறாமையும் பற்கடிப்பும் ஒய்ந்து பகுத்தறிவு வளர வேண்டும். திருநீற்றின், உற்பவமும், அதின் ஆரம்ப காலமும் நூலிலில்லை. பக்தர்கள் சிவனைக் காண விபூதியணி கின்றார்களென்றும், சிவன், மனிதர்களைக் காக்க விபூதி பூசிக் கொள்கின்றார். என்றும், கூறப்பட்டிருப்பதால், நீறு கடவுளுடன் கூடவே பிறந்திருக்க வேண்டும். அந்த விபூதியே சுடுகாட்டு சாம்பல், அதினால்தான் சிவன் சுடுகாட்டு சாம்பலில் இருக்கின்றார். பூதி, பூத, மாபூதி, நீறு, நீற்ற, என்பன சாம்பலின் பெயரே யாகும். தேவாதி தேவனாகிய சிவபிரானணிவதால் தேவ சாம்பல் அல்லது திருநீறு என்று சொல்லப்படும். பிள்ளைகள் நோயால் வருந்தாது மருந்துண்டு தாய்மார் காப்பது போல, காக்குந் தொழிலையுடைய சிவபிரான் உயிர்களுக்குத் துன்பத்தை நீக்க சுடுகாட்டு வெண்ணீற்றை யணிகின்றாராம்.