பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

119



வாதவூர் புராணம். பவுத்தர்கள் முன்னிலையில் சைவர்கள் பொய்சொன்ன சுருக்கம் பாட்டு 76. நீற்றினை யணிந்தது என்னின் னிறைவனென்றே சாற்றினை உயிர்க்கிடர் தனிப்பதென வெண்ணாய் தோற்றியுள்தம் புதல்வர் துன்பமுறு மந்நோய் மாற்றும் வகை யன்னையர் அருந்திய மருந்தாம். இன்னொரு விந்தையான திருநீற்றை சைவர்கள் கூறி வைத்துள்ளார்கள். இக் கருத்தை நம்பியே செத்த பிணங்களுக்கும் விபூதி பூசி வைப்பார்கள். அது வருமாறு. பிரமோத்தர காண்டம் விபூதிமா மகிமை 34 முதல் 42 முடிய பாட்டின் கருத்து "அதிக தூர்த்தனாக இருந்த ஒரு பிராமணன் ஒரு இராத்திரி, ஒரு புலைமாதுடன் வியபிசாரம் பண்ணிக் கொண்டிருக்கையில், அம்மாதின் கணவன் கண்டு, அத் தூர்த்தனை வாளினால் வெட்டிக் கொன்று, வேலிக்கப்பா லெறிந்தானாம். அந்நேரம் பசியால் வருந்தி குப்பைச் சாம்பலிலே புரண்டிருந்த ஒரு நாய், அப்பிராமணப் பிணத்தைக் கண்டு அதின்மேலேறி, மிதித்துக் கொண்டு தசையைக் கடித்து இழுத்துத் தின்றது. நாய் கால் களிலே ஒட்டிக்கொண்டிருந்த குப்பைச் சாம்பல் பிராமணப் பிணத்தின்மேல் படிந்ததால், சிவ கணங்கள் வந்து உபசரித்து புட்ப விமானத்தில் ஏற்றுஞ் சமயம், பிராமணனின் தூர்த்த நடத்தைக்காக அவனைத் தண்டிக்க யம தூதர்கள் வந்து சேர, அவர்களை சிவகணங்கள் விரட்டியடித்துத் துரத்திவிட்டு காமதூர்த்த பிராமணனை சிவலோகத் தில் கொண்டுபோய் சேர்த்தார்கள்"