பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

120 க. அயோத்திதாஸப் பண்டிதர் வைஷ்ணவத் திருநீற்று விபரம் உபதேச காண்டம் பூமகள் அர்ச்சனை மான்மியம் 4 முதல் 18 பாட்டுவரை கருத்து. ஜலந்திர னென்பவனுடைய மனைவி பிருந்தை என்ப வளைக் கற்பழிக் க வெகுநாளாக ஆவல் கொண்டிருந்தார் நாராயணமூர்த்தி. ஒருநாள் ஜலந்திரன். தன் சரீரம் சிவனால் இரண்டாகப் பிளக்கப்பட்டு இறந்தான். இதனையறிந்த பிருந்தை அக்கினியில் விழ யத்தனித்தாள். அப்போது மாறுவேடம் பூண்ட மஹா விஷ்ணு பிருந்தையைப் பார்த்து, ஜலந்திரனை உயிரோடு எழுப்புவதாகச் சொல்லித்தாமே பிளவுண்ட உடலில் புகுந்து ஜலந்திரனாகவே வெகுகாலம் பிருந்தையுடன் இன்ப மனு பவித்துக் காமமயக்கேறியிருந்தார். அதனால் ரஷிப்புத் தொழில் நின்றது. ஒருநாள் விஷ்ணு தூங்கும்போது, அவர் செய்திருந்த மாயம் நீங்கவே! பிருந்தை, விஷ்ணு வென்றறிந்து கூக்குரலிட் டழுதாள். இவன் என் கணவனல்ல வென்று எல்லாருக்குஞ் சொல்லி அக்கினியால் விழுந்து இறந்தாள். அந்த பிருந்தைப் பிணச்சாம்பலில் மஹா விஷ்ணு வெகு காலமாகப் புரண்டுக் கொண்டிருந்தார். அந்த சாம்பலை வாரிப் பூசிக் கொண்டார். சிவனைப் போல் இவரும் சுடுகாட்டு சாம்பலை யணிந்து, பிருந்தைச் சுடுகாட்டில் வசித்து வந்தார். வைஷ்ணவர்களணியும் சின்னம் பிருந்தை சாம்பல் என்றும் சொல்லலாம். முஸ்லீம்கள் சாம்பிராணியை எரித்த காட்டுப்புக்கரி சாம்பலை விபூதிபோல் அன்னிய மதஸ்தர்களுக்கு முகத்தில் பூசுவார்கள். கிறிஸ்துவர்கள் வருடத்திற்கு கொருநாள் விபூதி திருநாள் கொண்டாடி முகத்தில் விபூதி யணிந்தோ இல்லாமலோ அவர்கள் தெய்வங்களைப் பிரார்த்திப்பார்கள். இக்கதைகளெல்லாம் விபூதியைச் சொல்லி வருவதால் ஒன்றாகச் சேர்த்து சுருக்கப்பட்டிருக்கின்றன. இதுவே திருநீற்றுக் கதைகளாகும். இவ்விபூதி சரித்திரங்களின் கருத்துக்களை ஆலோசிக்கலாம்.