பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

121


________________

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று 121 அத்தியாயம் 3 தெளிதல் இந்திய சகோதரி சகோதரர்களே! ஒரு விஷயத்தை ஆராய்ந்தறிய புகு முன்னம் தங்கள் மனதை நிதானப்படுத்தி, தாங்கள் எடுத்துக்கொண்ட காரியத்தில் புத்தியை உபயோகித் தல் விவேகமாகும். அப்படியே ஒன்றை அநுஷ்டிக்கு முன்னும் அதனை விசாரித்தறிதல் மேன்மையாகும். ஏனென்றால் நமது தேசத்தில் வெகு சிலர் மனமொப்பி சாம்பலைப் பூசிக் கொள்கின்றார்கள். சிலர் சர்வ ரோகங்களும் சாம்பலால் தீரு மென்பார்கள். ரோகங்க ளென்ப தென்ன? அதனைப் போக்கும் ஒளஷதங்களென்ன? பாபங்களென்ப தென்ன? அதனைப் போக்கும் உபதேசங்களென்ன? என்று விசாரித்தறியு முன்னம் ஒருவர், மாபூதியை, திருநீற்றை. விபூதியை முகத்தில் பூசிக்கொண்டாரென்றால், அதின் பலனை, அதின் உற்பவத்தை, அதின் ஆரம்பகாலத்தை, எப்போதறிவார்? இம்மையிலா? மறுமையிலா? குருவைச் சுட்டச்சாம்பல், பிணங்கள் வெந்த சுடுகாட்டு சாம்பல், ஒருவனுடைய காதலி இறந்து வெந்த சாம்பல், எருமுட்டைச் சாம்பல், அடுப்பஞ் சாம்பல், ஜபமாலைகள் வெந்த சாம்பல், காட்டடுப்புக்கரியில் சாம்பிராணி வெந்த சாம்பல் என்னும் விபூதிகளில் பெரிய அற்புதங்களிருப்பதாகச் சொல்லி மக்களை ஏமாற்ற, சாம்பல், சந்தனம், செந்தூரம் கரி, சாந்து, குங்கம். முதலிய வர்ணங்களை நெற்றியில் பூசி வருகின்றீர்கள். விபூதியணியாத பவுத்தர்களைப் பாழ் நெற்றியு டையரென்று தூஷிப்பார்கள். பவுத்தர்கள் வந்து தர்க்கிக்காம லும், யமதூதர்கள் வந்து உயிரைக்கவராமலும், சாம்பல் பாதுகாக்கின்றதென நம்பி குப்பைப்புழுதியைக் காப்பென்பீர் கள். இது நியாயமா? பகுத்தறியுங்கள். திருநீற்றுக் கவ்வளவு மகத்துவ மிருப்பதாற்றானோ சிவனும் தன் பாபங்களைப் போக்கிக் கொள்ள, சுடுகாட்டுச் சாம்பலில் கிடந்தார் என்கின்றீர்கள்? அவ்விதமே அடியார் களும் சாம்பல் பூசத்தலைப்பட்டு விட்டீர்களாக்கும். சாம்பல் பூசி பாபமற்ற சைவர்களே! நீங்கள், சாம்பல் பூசாத பவுத்தர்களைச் செய்துவந்த துன்பங்களுக்குப் பயந்து நடுங்கி ஒடுங்கி, தங்கள் பரிசுத்த