பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

122 க. அயோத்திதாஸப் பண்டிதர் நெற்றியைக் கொண்டு போய், சாம்பல் மூஞ்சிகளாகிய சைவர்கள் அசுத்த நெற்றியில் தேய்த்துக்கொண்டார்க ளென்றால், சிவன் புரண்டிருந்த சுடுகாட்டு சாம்பலினால் நீங்கள் ஜீவகாருண்யம் அடையவில்லையே? பாபத்தைப் போக்கிக் கொண்டதாகத் தோன்றவில்லையே? சிவச்சாம்பல் மருத்துவம் பெரியதோ? அடியார்கள் நடந்துக்கொண்ட ஒழுக்கம் பெரியதோ? முஹமதியர் வாளால் மதம் போதித்ததும், சைவர்கள் சாம்பலால் மதம் போதித்ததும் ஒரே கருத்தென்று 2 ண்மைச் சைவர்களுக்கு விளங்காமற்போகாது. மூடர் களுடைய ராஜ்யத்தில், விபூதியணியாதவர்களை சுடலையாண் டிகள் செய்துவந்த அக்கிர மங்கள் பலவே. இவர்களுக்கு மூட வரசர்களுடைய உதவியும் இருந்தது. ஒரு பலனும், ஒரு அறிவும், ஒரு உபகாரமுமற்ற மந்திர மொழிகளும், பஞ்சாக்ஷரம் சடாக்ஷரங்க ளும் படித்துத் திண்ணைத்தூங்கிகளாகச் சாம்பல் பூசி காலந்தள்ளி வந்துள்ளார்கள். பட்டினத்துப்பிள்ளையார், உரைக்கைக்கு நல்லதிரு வெழுத்தைந்துண் டுரைப்படியே நெருக்கித் தரிக்கத் திருநீறு முண்டு ........ பேதை யரசர்களை ஏமாற்றி, சிவ சந்யாசிகள் எண்ணற்ற கொலைகள் செய்து வந்தார்கள். சிவமதத்தை உண்மைப் படுத்தவே சாம்பலணியாத பவுத்தர்களைக் கழுவிலும், வசியிலும் ஏற்றிக்கொன்றார்கள். அப்போதும், சாம்பலணி யா மலே பாழும் சிவமதத் தடியார்களின் படுகொலைக் குள்ளானார்கள். ஊரீருமக்கோ ருபதேசங் கேளு முடம்படங்கப் போரீர் சமணைக் கழுவேற்று நீற்றைப்..... சிவமதமும், சாம்பலும், மருத்துவம் தங்கியதாக விருந்தால், பவுத்தர்களை உயிர்போகுமட்டும் இம்சிப்பதேனோ? செத்த பிணத்தின்மேல் குப்பைச் சாம்பல் பட்டதும், கணங்கள் வந்து அப்பிணத்தை கைலாயங் கொண்டு போனார்களென்றால், சாம்பல் தூவிய நாய்க்கு ஏன் அப்பதவிக் கிடைக்கவில்லை? பல சைவப் பிணங்களுக்கு மந்திரஞ் சொல்லி விபூதி பூசி, மனிதர்கள் கடலைக்கு எடுத்துப்போவதைப் பார்க்கின்றோமே! அல்லாமல்