பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

123



சிவகணங்களைக் காண்கிலோமே. வீட்டு விபூதி யிலும் சிவனிருக்கும் சுடுகாட்டு சாம்பலிலும், குப்பைச் சாம்பல்தானா மேன்மைத்தங்கியது என்று கேட்கின்றோம். வள்ளுவர்கள் தங்கள் குரு தேக சாம்பலணிந்தார்கள். சிவன் சுடுகாட்டு சாம்பலில் படுத்திருக்கின்றார், நாராயணமூர்த்தி அன்னியனு டைய மனைவி சாம்பலில் புரண்டிருந்தார் என்று பற் பல கதைகளெழுதி பிரிவுபடுத்தி, முகத்தில் சாம்பல் பூசிக் கொண் டார்களே யன்றி. உண்மையைப் புகல வெளிவர வில்லை, அப்படியாக அவர்கள் உண்மையைச் சொல்லி வந்திருந்தாலும், இக்காலம் உண்மையும், தெய்வமும், ஆரோக்கியமும் சாம்பலிலுண்டென்று சாதிக்க, மூட மயக்கொழிந்த நமது சைவ மதத்தோர் துணிவார்களா? சிவசமயாச் சாரிகளை மெய்யரென நம்பியதே! சிவ சமயிகளுக்கு மதிப்பும் அறிவுங் குறைந்து விட்டது. ஆபாச கதைகளெல்லாம் சிவன்மேல் ஏற்றப்பட்டது. நாடு அடிமைக்குள்பட்டுவிட்டது. தன் தலையில் ஒரு பெண்ணைச் சுமந்தும், ஒருகையில் யானைக்குட்டியையும், ஒரு கையில் பார்வதியைப் பிடித்துக் கொண்டும், இடையில் புலித்தோலும், முதுகில் யானைத் தோலும், கழுத்தில் பாம்புகளையு மணிந்து அலங்கோலமாக மாட்டின் மேலேறி சுடுகாடு போகும் சிவனை, மனிதர்கள் கண்டு துதிக்க மனமுண்டாகுமா? இப்பெரிய அவலக்ஷணத்தை எழுதிவைத்தவர்கள் சைவப் பெரியோர் களல்லவா? இது சிவனை இழிவு படுத்துவதா? அல்லது சிவனிருந்த இந்தியாவை (இந்தியர்களை) இழிவுபடுத்துவதா என்றோசித்துப் பாருங்கள் உண்மை விளங்கும். பொய்யான தேவதைகளை மெய்யென நம்பி, சாம்பலைக் குழைத்து ம் குழைக்காமலும், குறுக்கிலும் நெடுக்கிலும், அழுத்தமாகவும் மேலாகவும் முகத்தில் தடவிக்கொண்டு மதவடையாளங் காட்டுவது பைத்தியமல்லவா? மேல் நாடுகளில் எந்த மதஸ்தனாவது சாம்பலைப்பூசி முகத்தைக் கெடுத்துக் கொள்ள நினைவானா? நீங்களே கடவுளை நம்புகிறவர்களாக இருந்தாலும், நீங்களணிவது சாணச்சாம்பற்றானே! அறியாமை என்னும் படு குழியிலமிழ்ந்து, அன்னிய மதக்காரர்களால் கொள்ளைப்போய்க் கொண்டிருக்கும் சகோதரர்களே! உங்கள் மனக்கண்ணைத் திறந்துப் பாருங்கள். "கல்லிலுஞ் செம்பிலுமோ விருப்பா னெங்கள் கண்ணுதலே” என்று பெரியோர்