பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

124 க. அயோத்திதாஸப் பண்டிதர் சொல்லிருக்க, அதற்கு மாறாக புழுதியில் சாமியுண்டென்று சொல்லல் சற்சங்கத்தார் கொள்கையா? அல்லது துற்சங்கத்தார் கொள்கையா? என்று நீங்களே ஆய்ந்துப்பாருங்கள் விபூதி வயிற்று வலியைப்போக்கியதாக நம்புவார்கள். அது எப்படி தீர்க்குமென்று விசாரிக்க மாட்டார்கள். சில வைஷ்ணவர்கள் கலக்கிய புட்டி நாமம் வைத்திருப்பது போலவே! சில சைவர்கள், தகரபரணியில் கொஞ்சம் சாம்பலை வைத்திருப்பார்கள். முகத்திலுள்ள சாம்பலுக்கு பயந்து பல மணிநேரங்கள் மட்டும் முகங்கழுவாமலிருப்பார்கள். விபூதியில்லாவிட்டால் அடுப் பஞ்சாம்பலையே சுத்தப்படுத்திய முகத்தில் பூசி அழுக்குப் படுத்திக் கொள்வார்கள். மாட்டுச்சாணம், சாம்பலானால் அது மாட்டைக் காக்குமா? அப்படியே மனிதன் சாம்பலாகுவதைப் பார்க்கலாம். ஆனாலச் சாம்பலே மீண்டும் மனிதனை மோக்ஷத் திற்கு கொண்டு போகுமா? மனிதனுக்கும் சாம்பலுக்கும் என்ன சம்பந்தமுண்டு? இதை யுணராதிருப்பதுதான் பெரிய அநியாயமாகும். இக்காலத்தில் வயிற்று நோயையுடைய சைவன், விபூதியை மருந்தாக வேற்றல், அவனுக்காக வைத்தியசாலைத் தேவையில்லை. சிவன் சுடுகாட்டி லுண்டென்றால் அவருக்கு கோவில் நாட்டுகள் தேவையில்லை. முற்கால முதல் தற்கால மட்டும் யார் பூசிய விபூதியாக இருந்தாலும் அதில் ஒரு பலனுமே இல்லை.சில மத மிருகங்கள்; மேல் மினுக்காக விபூதியணிந்து, நான் மனிதரிற் பெரிய ஜாதி என்று கர்வித்து, அதைப்பற்றி சில விளையாட்டு கதைகள் கூறுவர். முற்கால சில தேவர்களும் முனிவர்களு மித்திருநீற்றை யணிந்தது கிடையாது அணிய யாக்யாபித்ததுமில்லை. சிவவாக்கியர் இருக்கு நாலுவேதமு மெழுத்தறவே யோதினும் பெருக்க நீறு பூசினும் பிதற்றினும் பிரானிரான் ...ட்டினத்துப்பிள்ளை நீற்றைப் புனைந்தென்ன நீராடப் போயென்ன நீ மனமே மாற்றிப் பிறக்க வகையறிந்தா யில்லை மறைமுடிவில்