பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

125



சில பெரியோர்கள் உடம்பில் விபூதி யணியவேண்டும் மென்பர். சிலர் பொருட்களின் மேல் பூசுவார்கள். கிறிஸ்துவர் களாவது தங்கள் பாதிரிகளிடம் விபூதி கொடுத்து மந்திரத்தால் சுத்தமாக்கி அதைப் பூசிக்கொள்வார்கள். வெய்யற்காலங்களில் வைக்கும் குளிர் நீர் பானைக்கு மந்திரமில்லா விபூதியை சைவர்கள் பூசுவதால் அதின்மேல் நாய் மூத்திரம் பெய்ய நேர்ந்தது. இப்போதுள்ளது கடவுள் விபூதியானால் நாய் அவ்விதம் செய்யாது. சிவன் கிடந்த சாம்பலானால், நாம் சுடுகாட்டில் மிதிப்போமா? விபூதி மெய்யாயின், வைத்திய சாலையில் வைக்க விண்ணப்பஞ் செய்ய மாட்டோமா? வள்ளுவர்கள் மாபூதியிலும், சைவர்கள் திருநீற்றிலும், முஹம்மதியர் சாம்பலிலும், கிறிஸ்துவர்கள் விபூதியிலும் ஒரு நல்லறிவையு மடைய முடியாது. காரணங் காணாமல் சாம்பல் பூசிவருவது பழக்கப்பட்ட பைத்தியம் அப்பைத்தியத்தால்தான் அநேக பூச்சிகள் சாணத்தில் வெந்து அடங்கியிருக்கும் நீற்றை உணராமல், வாயில் போட்டு தின்கின்றார்கள். பிணச் சாம்பலுக்கும் விபூதிக்கும் மாறுதல் உண்டோ ? உண்மையான சகோதரர்களே! நமது தேச சீர்திருத்த தெய்வத்தைக் கைவிட்டு அல்லலடைவதைப் பாருங்கள். அறியாமையில் ஆழ்ந்து நாசம் மடைவதைப் பாருங்கள். இனியேனும் நமது நாட்டில், நம்முடன் பிறந்து நமக்காக தன் சுகமிழந்து நம்மை ஆதரித்தலோக நடு நாயகனாகிய புத்த சுவாமியுடைய திவ்விய சரிதத்தைப் பார்த்து, உங்கள் நியாயமான வாழ்க்கையைக் கைக்கொள்ளலே அறிவுடைமையாகும். ஏழை வள்ளுவர்களுடைய குரு சாம்பல் கதையை அபகரித்துக்கொண்டிருக்கின்றீர்களா? அல்லது பவுத்தர்களுடைய சுத்த சரிதத்தை எடுத்து கரைப்படுத்தியிருக் கின்றீர்களா வென்று படித்துப் பாருங்கள். தயவு செய்து வள்ளுவர்களுடைய குரு சாம்பல் கதையை அவர்களுக்கு ஒப்படைத்து விடுங்கள். உங்கள் சுடுகாட்டு சாம்பல் கதையை நீங்கள் படித்துப்பார்த்து, உண்மை குருவாகிய புத்த பகவானைப் பின்றொடரகதேக தெய்வ சமதர்ம தூதர்கள் வேண்டுகின்றோம்.