பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

--- 126 க. அயோத்திதாளப் பண்டிதர் அத்தியாயம் 4 புத்தர் பரிநிர்வாணம் உலகநாத னென்றும் சற்குருவென்றும் தோன்றி தன்னுயிர்க் கிரங்கான் பிறவுயி ரோம்பும் மன்னுயிர் முதல்வர் னெனக் கொண்டாடப்பெற்ற, சாக்கிய முனிவர், தான் கண்டறிந்த உத்தம தர்மத்தை உலகெங்கும் பரவச் செய்வித்து, ஆங்காங்கு சங்கங்களை நிலைநாட்டி மெய்யர்களைக் கூட்டி, தனது அறக்கதிரை வீசி, மனவிருளை மாற்றி ரஷித்துக் கொண்டே குஷி நகருக்கு வந்து தர்மோபதேசம் செய்துக் கொண்டிருந்து, 80-வது வயதில் பரிநிர்வாணமானார். சித்தார்த்தர் திருவுருவை என்று காண்போம். தேஜோன்மய ரூபத்தை என்று காண்போம். அழியாத அறவுரையை என்று கேட்போம் என்று அருகிலிருந்த பிrக்கள் முதலாயினோர் அழுதார்கள். நிர்வாணமென்ப தேதோவென்றெண்ண வேண்டாம். உடலுயிர் சேர்க்கைக்கு வாணமென்றும், உடலுயிர் பிரிவிற்கு நிர்வாணமென்றும் சொல்லப்படும். குஷி நகரத்து குடிகளும் பிக்ஷக்களும் ஒருங்கே சேர்ந்து; மலர்களால் அவ்விடத்தை அலங்கரித்து தூப தீபங்களால் பரிமளிக்கச்செய்து அதில் சந்தனம் முதலிய வாசனைக் கட்டைகளை யடுக்கி, அதில் புத்த பகவான் தேகத்தை வைத்து தேக சேஷமும் பஸ்பமும், எட்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, எட்டு திசைகளிலுமுள்ள ராஜ்யங்களால் கொண்டுபோய் சேமிக்கப்பட்டன. அவைகளில் ஒரு பாகம் குஷி நகரத்தார் களால் கட்டப்பட்ட சங்கத்தில் சேமித்து வைக்கப்பட்டது. இக்காலத்தில் பாலபாகங்களில் புத்தர் அஸ்தி பூமியில் கிடைப் பதை அநேகர் பார்த்திருப்பார்கள்: அநேகர் கேள்விப்பட்டு மிருப்பார்கள். எல்லா தேசத்தார்களும் அதற்கு புகழ் கூறுகின்றார் கள். இதுவே இந்தியாவில் பகவன் புத்தர் தேக சாம்பலை சேமித்துவைத்த விவரமாகும். இந்தியாவில் பகவன் புத்தர் பிறந்த 3475- ஆம் கணக்கை யும் புத்தருடைய தேக சாம்பலையும், நமது தேச வள்ளுவர்களும், சைவர்களும் மற்ற மதஸ்தர்களும் பெருமைப் பாராட்டி இச்சாம்பல் எங்கள் தெய்வம் தரித்திருந்தது; இது ஆதிகாலத்தி