பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

127



லுண்டானது; இது பாபங்களைப் போக்கும் தேவாமிர்தம் என்று சொல்லிக்கொள்வதல்லாமல், வாஸ்தவத்தில் இந்துக்கள் கூறும் ஒரு தனித்த மாபூதியாவது, திருநீறாவது, விபூதியாவது இருந்ததாக உறுதி இல்லை. புத்தருடைய தேக சாம்பல் பதனப்படுத்தி வைக்கப் பட்டதே யல்லாமல், முகத்திலும், உடம்பிலும், பெட்டிகளிலும், வாசற்கால்களிலும், கதவுகளிலும் தடவி இரைக்கப்படவில்லை. வீணாக சிற்சில வம்பர்கள் பவுத்தர்கள் மேற்கொண் டுள்ள பொறாமையின் நிமித்தம் சாம்பலணிந்து, பவுத்தர்களைப் பகைமைப்படுத்துவார்கள். விபூதி யணிந்துவரும் ஒவ்வொரு சகோதரி சகோதரர்களும், கண்மூடித்தனமாக இக்காலத்தி லிருக்கக்கூடாது. இவ்விதம் அடையாளங்கள் நம் தேச தெய்வத்தை அவமரியாதைப்படுத்துகின்றது. பாரம்பரியமாக விபூதி பூசி வந்தவர்களெல்லாம் மோக்ஷ மடையவில்லை. கடவுளைக் காணவில்லை, அவர்கள் செத்தும் விபூதியோடுதான் சுடலைச் சென்றார்கள் விபூதியில் ஏதோ மகத்துவமிருப்பதாகக் கருதி திருநீறுத் தரிப்பதில் அறிவுவளராது, உடம்பில் தடவிய விபூதி கலையாவண்ணம், வஸ்திர மணியாமல் வெற்றுடம் போடிருக்கும் அன்பர்களையும் காண்கின்றோம். இந்த அநியாயத்தில் அறிவு செலுத்தி தேச மக்களைச் சீர்திருத்துவது பெரிய தர்மமாகும். அறிவு வளர்வதற்கு நம் லோக நாயகனாகிய பகவன் புத்தருடைய புநிதமான உபதேசத்தில் பங்கு பெற வேண்டும். அவர்தான் நமது மூட பழக்கத்தையும், நமது பரிதாப கரமான செய்கைகளையுங் கண்டு, தனது எல்லா சுகபோகங் களையும் விடுத்து, இரந்துண்டு நமக்கு நன்மையை உபதேசித்து, பரி நிர்வாணமானார். அந்த நிக்ஷயக் கடவுளைக் கைவிட்டு நாமடைந்துள்ள அவமான மிவ்வளவென்றோத இயலாதாகை யால், அன்பர்கள் இனியேனும் நமது நாட்டுக் கடவுளாகிய பகவன் புத்தருடைய திவ்ய உபதேசத்தைக் கைக்கொண்டொழுக சுதேச தெய்வ சமதர்ம தூதர்கள் வேண்டுகின்றோம். விபூதி ஆராய்ச்சி முற்றும்.