பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்திபிரிப்பது முதல் எழுத்துக்கள் வரை பழைய வெளியீடுகளில் இருந்ததே இதிலும் பின்பற்றப்பட்டுள்ளது. எந்தப் பதிப்பிலிருந்து எடுக்கப்பட்ட தென்னும் விவரம் தெரிய அந்தப் பதிப்புகளின் முதல் பக்கங்கள் அப்படியே வெளியிடப்பட்டுள்ளன. பெரும் நிறுவனங்கள் சிரத்தையோடு செய்ய வேண்டிய அரிய பணி இது. பரவலான மக்களுக்குச் செல்ல வேண்டுமென்பதற்காகவே இப்படித் தொகுப்புகளாக வெளியிடுகிறோம்.

முதல் தொகுதியான இத்துடன் , ஸ்ரீ அம்பிகையம்மன் அருளிச்செய்த திருவாசகம், அம்பிகையம்மன் (ஒளவை) வரலாறு ஆகியவை அடங்கிய இரண்டாவது தொகுதியும்; முருகக்கடவுள் வரலாறு, திருக்குறள் கடவுள் வாழ்த்து, புத்த மார்க்க வினா - விடை, விவாக விளக்கம் ஆகியவை அடங்கிய மூன்றாவது தொகுதியும், இந்திரர் தேச சரித்திரம் என்ற முழுநூல் நான்காவது தொகுதியாகவும் வெளியாகின்றன.

மத்திய அரசின் சார்பில் சென்னையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சித்தமருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கு அயோத்திதாஸப் பண்டிதரின் பெயர் மத்திய சுகாதாரத்றை அமைச்சரான திரு. தலித் எழில்மலை அவர்களின் முயற்சியால் தற்போது சூட்டப்பட்டுள்ளது.

இந்தத் தொகுப்புகளில் இடம் பெற்றுள்ள படைப்புகளைப் பெறுவதில் உதவிய எஸ்.வி. ராசதுரை, கண்ணன். எம் (புதுவை) ஆகியோருக்கும் இவை வெளிவருவதிலும், மெய்ப்புத் திருத்துவதிலும் உதவிய ரவிக்குமார், கு.மு. ஜவஹர், ஆசைத்தம்பி, சி.துரைக்கண்ணு, ஆகியோருக்கும் நன்றி.

இந்த விளைச்சலின் பலன் வெகுமக்களுக்கு உரித்தாகட்டும்.

20.5.1999.

தலித் சாகித்ய அகாடமி,
சென்னை .