பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அரிச்சந்திரன் மெய்யனென்னுங் காதையும் பொய்யனான விபரமும். திரு.க. அயோத்திதாச பண்டிதர் எழுதியது. "பொய்யுடைய ஒருவன் சொல்வன்மையினால் மெய்போலும்மே மெய்போலும்மே!” சத்திய பாஷ அரிச்சந்திரன் கதைகளின் சாராம்சம் நமதன்பர்கள் ஒவ்வொருவருக்கும் விளங்கி யிருந்தபோதிலும், அப்புராணம் ஏற்பட்ட விதத்தையும் அதினந்தார்த்தத்தையும் இவ்விடம் விளக்கி வைக்கவேண்டிய கடமையுடையோரா யிருக்கின்றோம். அதேனென்றால் இந்தியாவில் இருந்த மேதாவிகளெல் லாம் கட்டி வைத்தது இந்திர வியாரமாகும். அவைகளுக்கு அதிபதிகள் பிராமணர், அந்தணர் எனக் கூறும் அறஹத்துக் களே. அவர்கள் இல்லறத்தை முற்றுந் துறந்திருப்பவர்கள், கல்வியற்ற குடிகளுக்கு கல்வியும், நீதியற்றவர்களுக்கு நீதியும் போதித்து மக்கள் சீர்திருத்தக்காரர்களாக விளங்கியிருந்தார்கள். இவர்களைக் காணும், ஏழையும் தனவானும் வணங்கி விவேக வழிபாடடைவது அக்கால வழக்கமாயிருந்தது. இப்படி யிருந்த நம் இந்திரர் தேசமாகிய பாரத பூமியில், ஆரியர்-வடமிலேச்சர் என்னும் ஒரு கூட்டத்தார் குடிபுகுந்து நமது குருக்களுக்கிருந்த மேரை மரியாதையைத் தாங்கள் பெற்றுக்கொள்ள கல்வியற்ற சிற்றரசர்களையும், குடிகளையுமணுகி நாங்களும் அறஹத்துக் களென்று பொய்ச் சொல்லி தங்கள் பெண்டுகளைக் கூட்டிக் கொடுத்து அரசர்கள் புத்தியை விபசாரத்திற்குள்ளாக்கி பாழ்படுத்தித் தங்களையும் பிராமணர்களென்றெவரும் வணங்கி வரத்தக்க வழிகளைச் செய்துக்கொண்டார்கள். அவர்கள் போதனைக்குள் பட்டவர்கள் தான் இந்துக்கள். 18