பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

க. அயோத்திதாஸப் பண்டிதர்



அவர்களை நிராகரித்தவர்கள் தான் பௌத்தர்கள். அப்பெளத்த மேதாவி களைத்தான் அக்காலத்தில் பறையர் களென்று தாழ்த்தினார்கள் அக்கால் நாங்கள் பறையர்களல்ல! பெளத்தர் களே என்று தர்க்கித்ததினால், பெளத்தர்கள், ஆம் என்று ஒப்பிக்கொள்ளும் பொருட்டு நந்தன் என்னும் பறையனொருவ னிருந்தான் என்று எப்படி ஒரு கதை எழுதி வைத்திருக்கின்றார் களோ! அப்படியே பறையனென்னும் பெயரைப் பரப்புவதற் காக காசியம்பதியில், வீரவாகு என்னும் ஒரு தோட்டிப் பறையன் சுடலையில் பிணங்களைச் சுடுவதும், குழி வெட்டியா னாகவும், வரும் பிணங்களின் வாய்க்கரிசியும், முழந்துண்டும் வாங்கிக் கொண்டிருந்தானென்றும் கதை எழுதி பேதையர்களை ஏமாற்றி வருகின்றார்கள், இத்ததைய ஏமாற்றலால் நம் தமிழுலகமானது இன்னும் நசிந்து நாசமடைவதற்கே, மெய்யை மெய்யென் றுரைக்க வெட்கப்பட்டு வருவதைக்கண்டு மனமாருதவிதமாய் நம் நாட்டில் நம் தமிழர்களாகிய திராவிடாதி திராவிட குலமயக் கொழிக்கும் பொருட்டாய், அன்னிய தேசத்தானுக்காக தன் பெண்ஜாதியை ஒரு பார்ப்பானிடம் ஒப்படைத்த வீண் பிள்ளையான, அரிச்சந்திரத் தோட்டிக் கதையின் நியாயத்தை சீர் தூக்கிப் பார்ப்பாம் - ஏனெனிலோ இந்திரர் தர்ம அஸ்திவாரத்தில், பஞ்சசீலமே சிறந்ததாக விருக்க அவற்றுள் ஒரு சீலமாம் "மூசாவதாரவேரமணி சிக்கா பதம் சமாதியாமி" என்ற பொய் சொல்லாமை என்னும் ஒரு திருவாக்கை பார்ப்பாருக்கு மாத்திரம் கடைபிடித்தானென்பதால் அதின் உண்மை வெளிபடுவ தின்றியமையாதனவாம். அந்நூலின் சுத்த மெய்கருத்துக்கள் நம் தமிழர்கள் புத்தியில் புகுந்து மூளையை சுத்திகரித்து, பறையரவர் பார்ப்பாரிவர் என்ற பாகுபாட்டை வெட்டி வீழ்த்த வேண்டும் என்ற புத்ததர்மமான சுயமரியாதை யை எல்லாரு மடைந் தின்புற்று வாழ எல்லார்க்கும் சொல்வது நல்லார் கருத்தாம். ஆகையால் இந்நூலின்படி, இந்துக்க ளென்னும் மூகைகள் பார்ப்பானை யுயர்த்திக்கொண்டு பௌத்தர்களைத் தாழ்த்திய விவரத்தை யறிவார்களாக. அயோத்தியா புரியை அரசாண்டு வந்த திரிச் சங்கு மைந்தன் அரிச்சந்திர னென்னும் ஓர் அரசனிருந்ததாகவும்,