பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

க. அயோத்திதாஸப் பண்டிதர்



பஞ்சமா பாதகங்களை யனுசரித்துக்கொண்டு நாங்கள் உயர்ந்த ஜாதி இந்துக்கள்; எங்கள் திரிமூர்த்திகளும் முப்பத்து முக்கோடி தேவர்களும் நாற்பத்தெண்ணாயிர ரிஷி முதலியவர் களெல்லாம் அநுசரிக்காத மெய்யை இந்த பார்ப்பானுக் கடிமையான சுய மரியாதையற்ற அரிச்சந்திரன் கைக்கொண்டா னென்று ஏமாற்றி வைத்திருப்பவர்களின்னம் என்ன செய்ய மாட்டார்க ளென்பதைப் படிப்பவர்களே அறிந்துக் கொள்வார்களாக. ஒரு நாள் தேவருலகிலே இந்து மத தேவேந்திரன் தன் சபையாரை நோக்கி பூவுலகில் பொய்சொல்லா வாசகன் யாராவ துண்டோ என்று வினவினான். சபையோர் அமைதி யாக இருக்கும்போது வதிஷ்டமஹா முனியானவர் பொய்யிலா வாசகன் உலகிலில்லை என்று எண்ணக் கூடாது, யாராவது இருப்பார் என்றார். உடனே விஸ்வாமித்திரர் எழுந்து உலகில் மெய்கூறத்தக்கவன் ஒருவனுமில்லை என்றார். இதனால் வதிஷ்ட ருக்கும் விஸ்வாமித்திரருக்கும் ஒர் தர்க்க முண்டாகி உலகில் அயோத்தியாபுரியை அரசு செலுத்திவரும் அரிச்சந்திரன் என்னு மரசன் பொய் சொல்லா வாசகனென்று வதிஷ்டர் உறுதி கூறினாராம். அதன்பேரில் விஸ்வாமித்திரன், அரிச்சந்திரனை சோதிக்க எத்தனித்தானாம். அவன் பொய் சொல்லாமலே பார்ப்பார்களுக்காக பல துன்பங்களை அனுபவித்து, இந்து மதஸ்தர்களுக்கு மாத்திரம் பொய்சொல்லா வாசகனாக விளங்கினானென்று அவன் பெயரில் எழுதியிருக்கும் புராணத்தில் விரித்துரைத் திருக்கின்றார்கள். இன்னமும், தேவருலகில் இவ்விஷயம் நடந்த பின் விஸ்வாமித்திரன் மண்ணுலகிற்கு வந்து தம்மைக்கேட்ட முனிவர்க்கு நடந்ததை மறைத்து மற்றொன்றை புளுகிவிட்டாராம். வஞ்சனைக்காண்டம் - பாட்டு 5.6 கொற்ற வாசவன் கூறிய மாற்றமும் மற்றொரு வாய்மை வசிட்ட னுரைத்ததும் உற்ற வாறு முணர்த்துத லின்றியே கற்றொரு வஞ்சனைக் கட்டுரைக் கூறுவான்.