பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று 137 தெரியு நீண்மறைத் தேவர வைக்கணே பெரிய மாதவர் பேசிய வேள்வியில் அரிய தொன்றுமுடிக்கும் வாவினால் கரிய வோலக் கடற்புவி யெய்தினேன். பொய்யைக் கண்டு பிடிக்க வந்த கெளசிக முனியே! பொய்யைச் சொல்லி வந்தானென்றால் இந்நூல் மெய்யென்பது எப்படி ? தேவருலகில் பல பெரியயாக முறைகளைப் பேசினார் கள் அதிலொன்றை முடிக்க மண்ணுலகம் வந்தேன் என்றாராம். முனிவன் பொய் மொழியும்போது அரசன் மொழிய ஆபேமென்னை? அறியுங்கள். பின்பு விஸ்வாமித்திரன், தாம் யாகஞ் செய்யப்போவ தாய் பொய்ச் சொல்லி பெரிய தனக்குவியலைத் தாமே கேட்டதாக முனிவர்களுக்குக் கற்பித்து அரிச்சந்திரனிடம் அனுப்பினானாம். முனிவர்களாகிய பார்ப்பனர்கள் போய்க் கேட்டபடியே விஸ்வாமித்திரனுக்கு தேவையானபோது அவர் குறித்துக் காட்டும் பெரிய தனக்குவியலைக் கொடுப்பதாக முனிவர் களிடம் அரிச்சந்திரன் ஒப்பிக்கொண்டானாம் இவ்வளவைப் பின்னே விவரத்தில் காண்க. விசுவாமித்திரனின் முதல் பிறப்பு, அரச வம்சத்தில் தோன்றி தனது ஞான விருத்தியால் பிராமணனாக விளங்கிய தாய் அவர் சரித்திரங் கூறுகின்றது. அத்தகைய புருஷன் சுவாசத்திலிருந்து இரண்டு பெண்கள் பிறந்தார்களாம். அவ்விரண்டு பெண்களே கறுப்பு நிறமமைந்த பறைச்சிகளென்று வரைந்திருக்கின்றார்கள். சூழ்வினை காண்டம் - பாட்டு 4. பேச்சினிற்கிளிபோற் செங்கார் பெயர்ச்சியிற்பெடை போற் செங்கை, வீச்சினின் மின்போற் சீற்ற மிகுதியான் முநிவன் விட்ட, மூச்சினிற் பிறந்த ரண்டு மோகினி மாதராழி நீச்சினி னிலைத்து நிற்கு நீலமென் கொடி போ னின்றார். இவ்விரண்டு பெண்களையும் தந்தையான விஸ்வாமித் திரன் கண்டு மிகக் களிப்படைந்து, பரதநாட்டியங் கற்பித்து தனக்கு பொன் கொடுப்பதாக வாக்களித்துள்ளவரசனுக் கிவ்விருவர்களை யுங் கூட்டி வைக்கலாமென்ற எண்ணம்