பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

க. அயோத்திதாஸப் பண்டிதர்



மேலிட்டவராய், அரிச்சந்திரனிடம் நீங்கள் போய் பாடி. நடி னஞ்செய்து, அவனுடைய வெள்ளைக் குடையைக் கேட்டு வாங்கி வாருங்கள் ஒருகால் கொடுக்க மறுத்தால், அவனுடன் கூடி. ககிக்க விரும்புங்களென்று கற்பித்து அவ்விரு பெண் களையும் அரிச்சந்திரனிடம் அனுப்பினானாம். அப்படி. யே அரசனிடம் போய் பெண்கள் வணங்க நீங்களாரென்றான் அரிச்சந்திரன். நாங்கள் விஸ்வாமித்திரரைச் சேர்ந்தவர்கள் எங்கள் குலம் நீச்ச ஜாதி. ஆனால் வீணைப்பாடத் தெரியுமென்று சொல்லி, பாடி நடித்தார்கள். எல்லாரும் சந்தோஷ மடையவே, இவர்களுக்கு பரிசளிக்க அரிச்சந்திரன் அநுமதித்ததை- யறிந்த பெண்கள் நாங்கள் நாடி வந்தது உ.மது வெற்றிக் குடையே. அதைக் கொடுத்தருளுமென, உடனே அரசன், அது பரம்பரை யாக வருவது அதைத் தவிர்த்து வேறு குடையைக் கேளுங்கள் கொடுப்பேன், என்றான். சூழ்வினை காண்டம் - பாட்டு 33. பழிவழி யெழுதா நீதிப் பாலுவின் குலத்து வேந்தர் வழிவழி வந்தக் கவிதையை வழங்க மாட்டேன் விழிவழி கண்ட வேறு கவிதையை விளம்பி லுங்கள் மொழிவழி தருவேனென்று மொழிந்தனன் மன்னர் கோமான் இவ்விஷ யத்தைக் கேட்ட இரு பெண்களும் அரசனை நோக்கி உ.மது வெள்ளைக் குடையைக் கொடுக்க மன மில்லையேல் எங்களை விவாகஞ் செய்துக்கொள்ளுமென் றார்கள். உடனே அரசன் சினந்து தூஷித்து அவ்விரு பறை மாதர் களை யும் விரட்டித் தள்ளும்படிச் செய்வித்தானாம். அரசனது நீதி இதுவோ? பார்ப்பானுக்கு மனங் கோணலின்றி மலைபோன்ற திரவியத்தைக் கொடுக்கத் துணிந்தவனுக்கு இக்குடை பெரிதாகி விட்டது போலும் மெய்யென்பதெது பொய்யென்பதெது வென்று கண்டு வாதித்திருக்கின்றார்களா வென் றராயுங்கால், பார்ப்பான் கேட்ட தெதுவானாலும் எவ்வளவானாலும் பல கஷ்டங்களை யநுபவித்து கொடுத்து விடுவதும் மெய்யென்பார்கள். பறையர் கேட்ட தெதுவான) லும் அதைக்கொடா மல் மறுத்துவிட்டால் அதுவும் மெய்யென் பார்கள்.