பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

139



பெண்களிருவரும், சேவகர்க்கு பயந்து, கையிலிருந்த வீணையை அரசன் முன்னே போட்டுவிட்டு ஓடிப்போய், தன் தந்தைக்குத் தெரிவிக்க, கோசிகன் கோபித்து அரிச்சந்திரனிடம் வர, அவன் இவரைக்கண்டு கோபமாய் வந்தீர்! உம்மோடு சண்டைசெய்ய வல்லனல்லேன் என்று கால்களைப் பிடித்துக் கொள்ள. பெண்களை மரியாதையற்றுத் தள்ளும்படிச் சொல்லியும், மன்னிப்புக் கேட்கின்றாய் பொய்யனே என்ற கருத்தாய், அவன் பிடித்திருந்த கால்களை உதறிக்கொண்டு முடி மேல் உதைத்து என் புத்திரிகளை இப்டி விரட்டி அவர்களைத் துன்பஞ்செய்யலாமோ என்றார் விஸ்வாமித்திரர் அப்போது அரிச்சந்திரன், சொல்லுகிறான். சூழ்வினை காண்டம் - பாட்டு 55, இக் கருங்குழ லேழையர் தம்மை நின் மக்க ளென்பது ணர்ந்தில் மாதவ அவ்விரு பெண்களும் உமது மக்களென்று தெரியாது என்றார் இது என்ன விந்தை! பெண்கள் வந்தவுடன் அரிச்சந்திரனே அவர்களைப் பார்த்து, சூழ்வினை காண்டம் - பாட்டு 21, சொல்லிய மாற்றங்கேளாத் தோன்றலும் வியந்து நோக்கி வல்லிநீர் யாரே தூர்தான் வந்தவா றேதீண் டென்றான். இவ்விதமாக நீங்கள் யார் எந்த ஊர் வந்த காரண மென்னை என்று கேட்டிருக்க, அதற்கு அவ்விரு பெண்களும், சூழ்வினை காண்டம் - பாட்டு 22, வேதமா முனிவன் வைகு மேதகு சாரனின்றுன் பாதமே பணிந்து நோக்கு மருத்துயிற் பதறி வந்தோம். நாங்கள் விஸ்வாமித்திர ரிருக்கிற மேம்பாடான சார்பிலே கூடி இருப்பவர்கள். 2.ம்மைக் கண்டு எங்கள் வெகுமதியைப் பெற வந்தோமென் றுரைத்திருக்க, இங்கு அரிச்சந்திரன், அப்பெண்கள் உமது புத்திரிகளல்ல வென்பது, பொய்யல்லோ? இவராமோ மண் ணுலகில் பொய்சொல்லா வாசகன். மற்ற இந்துக்களெல்லாம் பொய்யராயிருந்தார்களோ?