பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

140 க. அயோத்திதாஸப் பண்டிதர் பின்னும், கெளசிகன், அரிச்சந்திரனுடைய பேதைமை யைக் கண்டு, மன்னிக்கும்படி கேட்டுக்கொள்பவனே! நல்ல பாடலால் கேட்டு மகிழ்ந்து பரிசளிக்காமல் விரட்டிய குற்றத்தைப் பொறுத்துக்கொள்கிறேன். என் மக்களை நீ விவாஹஞ் செய்துக்கொள்வாயா? என, அதற்கு நீச ஜாதியாரு டனே அரசர்கள் கூடுதல் தவறென்று அரிச்சந்திரன் உரைக்க, மலைகளில் திரியும் வதிஷ்டன் சபிக்க நீசனான திருச்சங்கு மகனே! நீச்சனான நீ எம்மக்களோடு கூடுதல் நீதியல்லேவா? இப்போது என்னை, அன்னை தந்தை சுற்றமென் கிறாயன்றி என்னுரையை (என் மக்களைக் கொள்வதில்லையே! என்றார் கோசிகன். அப்போது அரிச்சந்திரன் கூறுகிறான். சூழ்வினை காண்டம் - பாட்டு 75. கண்ணை வேண்டினும் வாழ்வுட னீகுவன் மண்ணை வேண்டினும் வாழ்வுட னீகுவன் பண்ணை வேண்டிய செஞ்சொற் பறைக்குலப் பெண்ணை வேண்டிலன் யானென்று பேசினான். சுவாமி என், கண், மண், அரசு, வாழ்வு எதைக் கேட்டாலும் கொடுத்து விடுவேன். உம்முடைய பறைமாதர் களை யான் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று நீர் கேட்டதை யான் ஒப்பி உத்தரங் கொடுக்கமாட்டேன் என்றான். உடனே விஸ்வாமித்திரன் அரிச்சந்திரனைப் பார்த்து உமது அரசு முழுதும் எமக்கு கொடுப்பதாய் சொல்லியபடியே, யாம் ஏற்றுக்கொள்வோம் என்றார், அப்போது. சுவாமி உமது பெண்களை யான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும், தான் சொன்னபடி தன்னுடைய நாடு முதலியதை அப்போதே முனிவருக்கு தாரை வார்த்துக் கொடுத்து விட்டானாம். சூழ்வினை காண்டம் - பாட்டு 78. அந்த ணாளனை நோக்கிய வண்ணலும் உந்த மக்க ளுறுநலன் வேண்டிலேன் எந்த நாடு மிருநிதிக் குப்பையும் தந்த னன்மொழி தப்புவ தில்லென்றான்.