பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

141



சூழ்வினை காண்டம் - பாட்டு 86. குடைதந் தேனீன் கொடி தந்தே னென்குழுவாய் படைதந் தேனற்கனகத்திண்டேர் பரிதந்தேன் தடைதந் தேநின் றடி யே னேகத் தவனே நீ விடைதந் தேகென் றடி மேற் பரவி வீழ்வானை. இவ்விதமாக பார்ப்பானுக்கு நாடு, நகரம் யாவும் வலியக் கொடுப்பே னென்றுறுதி புகன்ற அரிச்சந்திரன் தன் தேயத்தில் நாட்டியுள்ள வெற்றிக்குடையை, பறைமாதர்களுக்குக் கொடுக்கப் பிரியப்படாமற் போனானே இதில் அரிச்சந்திரன் பொய்சொல்லாதவன், கெளசிகன் பொய் கண்டு பிடிக்க வந்தவன், அரிச்சந்திரன் சொன்னது "கேட்டாலுங் கொடுப் பேன்” என்றுதான் இதில் கொடுத்துவிட்ட உறுதி மொழியில்லை. எப்படி கெளசிகன் "நீர் கொடுத்துவிடுவதாகக் கூறிய நாட்டை நாமேற்றுக்கொள்ளுகிறோம்” என்றார். அந்த சொல்லைக் கேட்டு அரிச்சந்திரன் அதெப்படி "நாம் கொடுப்பதாகச் சொல்லிய அரசை பின்னும் பொய்க்க மாட்டோம்” என்றார். இதில் முனியும் அரசனும் பொய்யாக வில்லையா? விஸ்வாமித்திர முனியோ பெண்களுக்கு நடினமும் பாடல்களுங் கற்பித்து அரசர்களிடம் விபசாரத்திற் கனுப்புகிறவர். அவர் பொய் சொல்லக்கூடும். அரசனாயிருக்கும் அரிச்சந்திரனே பொய் பேசினானென்றால் குடிகள் மெய் பேசி வாழ முடியுமோ? இவ்விஷயத்தில் அரிச்சந்திரன் பொய் கூறவில்லை என்று எவரேனுந் துணியக்கூடுமோ? பின்னும் பாருங்கள் இவ்விஷயம் காட்டில் நடந்தது இவ்வரசு மாற்றத்தை, நகரில் ரூபித்து விடுவதற்காக, அரிச் சந்திர பிச்சைக்காரனும், விஸ்வாமித்திர அரசனும் நகரத்தில் வந்து சேர்ந்து, அரசனான விஸ்வாமித்திரன் யாவுமேற்றுக் கொண்ட பிறகு, அரிச்சந்திரனும் அவன் மனைவியும் குமாரனும், பொறுத்து மந்திரியும் நகரை விட்டு வேற்று நாடேகுங்கால் மந்திரிப் பிரதானிகள் யாவருஞ் சூழ்ந்து அரசனை நோக்கி மன்னனே மறுபடியு மெக்கால் வருவீரென்று வினாவினார்கள். மன்னன் அவர்களை நோக்கி நான் மறுபடி யு மின்னாட்டில் வரமாட்டேனென்றுறுதி வாக்களித்தான்.