பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

143



நகர் நீங்கிய காண்டம் பாட்டு 20. . ஒருத்திடினும் வெறுத்திடினு முனக்களித்த வரசுரிமை யொருகாலத்தும் மறுத்தினியான் வாங்கேனென் றெடுத்துரைத்தான் மன்னன்முனி வாட்டமுற்றான். சுவாமி யான் உனக்கு கொடுத்த அரசையினி ஒரு போதும் வாங்க மாட்டேன் என்றான். இந்த மெய்யைப் பாருங்கள் எப்படி நாட்டுள் வரமாட்டேனென்று பொய்ச்சொல்லி நாட்டுள் வந்தானோ, அப்படியே நாட்டை வாங்கமாட்டேனென்று பொய்ச்சொல்லி பின்னு மதே நாட்டைப் பட்டங்கட்டிக் கொண்டான். மீட்சிக் காண்டம் பாட்டு 70. பொன்முடி சூட்டி வாழ்த்திப் புரந்தான விசும்பிற் போனான். இதனாலாவது அரிச்சந்திரன் பொய்யனாகானோ உண்மைக்குத்தாரமாக பொய்ச் சொல்லியவனை ஒரு கூட்டத்தார் நியாய வரம்பு கடந்து, வன்மை மிகுதியால் மெய்ச் சொன்னா னென்றால் அக்கூட்டத்தார் போய் சேரும் மோக்ஷம் இதுவென்று உறுதி கூறப்போமோ? சகோதரர்களான இந்துக்களே! நியாயத்தைக் கைக்கொள்ளுங்கள். பின்னும் பாருங்கள் விஸ்வாமித்திரனானவன் அரிச் சந்திரனைப் பார்த்து நீ முன்னமே எனக்கு யாகஞ்செய்யக் கொடுப்பதாக வாக்களித்துள்ள பொன் திரவியத்தை இப்போது கொடுத்துப்போக வேண்டுமென்று விஸ்வாமித்திரன் சொல்ல, எல்லாமும்மிடமே உண்டென்றானாம் அரிச்சந்திரன். அப்படி யல்ல! அது தனியே வரவேண்டுமென, அப்படியே கொடுப் பேன், அதின் பிரமாணமென்ன வென்று அரிச் சந்திரன் கேட்க, எனது யாகத்திற்கு வேண்டியது ஒரு பெரிய யானையின் மீது ஒரு வாலிபன் ஏறி பலங்கொண்டமட்டும் கவண்கல்லை உயரத்தி லெறிந்தால் அது எவ்வளவு மேலே போகுமோ அவ்வளவு பொன் வேண்டுமென்று கேட்டார்.