பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

155



சாஸ்திரங்கள் கிடையாதென்றோ ? அல்லது வருடம், மாதம், தேதி, நாளென்பது எண்ணறியாக் காலமோ? ஆமெனில், சதுர்யுகக் கணக்கும் அதில் நிறைவேறினதாய் இதிகாச புராணங்களில் எழுதியிருக்கும் மகா விந்தையான விஷயங்கள் யாவும் பொய்யன்றோ? அல்லது மெய்யெனில், சோதிட பஞ்சாங்கம் ஏற்பட்டது கலியுகாதி 360-ம் வருடத்தில் அரசாண்டிருந்த விக்கிரமாதித்தன் காலத்திற்ருன் ஆரியபட்டர், வராகமிரர் என்னப்பட்டவர்களால் ஏற்படுத்தப்பட்டதென்றும், அப்படி ஏற்பட்ட பஞ்சாங்கத்தை 500 வருடம் வரையில் இந்துக்கள் பொய்யென்று அங்கீகரியாது நீக்கியிருந்ததாயும், பின்பு அவ்வரசனும் அவனைச் சார்ந்த அரண்மனை உத்தியோகஸ்தர் மாத்திரமே அநுசரித்து வந்ததாயும், அதன்பின் அரசனாக் கினைக்குப் பயந்துச் செங்கோலறிக்கைக்கு இது வேண்டியதா யிருந்தபடியாலுமே ஜனங்கள் நாளுக்கு நாள் கையாடி வந்தார்களென்றும், அதுமுதல் சென்ற 800 வருடங்களாகவே பஞ்சாங்கம் அநுசரிக்கப்பட்டு வருகின்ற தென்றும், அநேக , சாஸ்திரங்களும் நாளதுவரையில் இருக்கின்றதுங் கண்காட்சி யன்றோ ? ஆகையால் சகோதரர்களே! இந்த அரிச்சந்திரன் திரேதாயுகத்திலிருந்ததாய் இதிகாசங்கள் முறையிடுவதை சற்று மங்கீகரிக்க இடமில்லை. அப்படி யுண்டென அபிமானத்தா லொருவாறு ஏற்றுக்கொண்டாலும், தற்கால சோதிட சாஸ்திரங்களின்படி ஒன்றில் அரிச்சந்திரன் அரசாண்டது 21,649 98 என்றும், மற்றொன்றில் 26,04998 என்றும், வேறொன்றில் 8.0 4998 என்றும், மற்றும் வேறொன்றில் 480 என்றும் தெரியவருகின்றது. இப்படி. நான்கு சாஸ்திரங்களில் நான்குவிதமாய்ச் சொல்லுங்கால் எதையெடுக்கின்றது. எதை விடுகின்றது. இப்படி ஒன்றையும் நம்பாவண்ணம் ஒன்றை யொன்று பொய்யென ரூ பிக்கும் பிரமாணத்துடன் வெளி வந்ததற்குக் காரணம் என்னவோ! இதை விவேகிகள் நன் குணர்ந்தறிவார்கள் ஆயினுந் தற்காலத்தில் நாமாகிய இந்துக்கள் கையாடி வரும் பஞ்சாங்கத்தின் படி கணக்கிடப் புகில், அரிச்சந்திரன் அரசாண்டது 31,64,998 வருடங்களுக்கு முந்தியெனத் தெரியவருகின்றது. ஆம், அது மெய்யெனில், சோதிட சாஸ்திரமே ஏற்பட்டு 1398-வருமானதாய் அநேக