பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

க. அயோத்திதாஸப் பண்டிதர்



சாஸ்திரிகள் முறையிடும்போது, அதற்குமுன் குறித்திருக்கும் சதுர் யுகக் கணக்குகள் யாவும் பொய்யென்பதற்கு சூரியசித்தாந்தமும், பவுஷிகோத்திர புராணமும், தேவிபாகவதமும். கிரமஞ்சரி சோதிட சாஸ்திரமுமே போதுமான சாதியாயிருக்கின்றதுந் தவிர, இந்த அரிச்சந்திரன் காலத்திலிருந்த வசிஸ்டரும், விஸ்வாமித்திரரும் எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்குப் பின்வந்த இராமன் காலத்திலிருந்ததாய் இராமாயணம் முறையிடுகின்றதும். இந்த இராமனுக்கு எத்தனையோ வருடத்திற்குப்பின் துவாபரயுக முடிவில் அரசாண்டிருந்த துஷ்டியந்த மகாராஜன் காலத்திலிருந்ததாய்ப் பாரதம் முறையிடுகின்றதும், இவனுக்கு எத்தனையோ ஆயிர வருடங்களுக்குப் பின் கலியுகாதி 2541-ம் வருடத்தில் வட இந்தியாவில் அரசாண்டிருந்த கபிலவஸ்து அரசனாகிய சட்டடோநா குமாரனுக்கு உபாத்தியாயராய் இருந்தாரென்பதே போதுமான சாதியன்றோ? இன்னும் பூர்வ, சாஸ்திரிகளாகிய ஆரியபட்டர், வராகமிரர், காளிதாசர், ஷமணகர், அமரசிம்மர், கடகார்ப்பார், சங்குண்ணி , வேதாளபட்டர், வரருசி, தன்வந்திரி, கலகப் பண்டிதர், சங்குரிஷிக ளெழுதியிருக்குங் கிரந்தங்களும், இரண்டொரு வருடங்களுக்கு முன்னே சில சாஸ்திரிகளால் பகிரங்கத்திற்கு வந்த சில உண்மைப் பிரமாணங்களே சதுர்யுகக் கணிதமானது சுத்தப் பொய்யான கட்டுக்கதையென்று யாவரும் எளிதி லறிந்துக்கொள்வதற்குப் பிரத்தியக்ஷமாய்த் தெரிகின்ற தல்லவோ?

இதுவுந் தவிர, கேளும் எமது பிரிய சகோதரர்களே! இந்த அரிச்சந்திரனை எமதரும ராஜன் தோட்டி யுருவெடுத்துவந்து விலைக்கு வாங்கினானென்று சரித்திரங்கள் கூறுகின்றபடி யுண்மையென நம்பி சரிதாதி பக்திக்குரிய புண்ணிய சரித்திரமென்று மனிதரை மயக்கத்தக்க நாடக ரூபமாய் நடிக்கவும், அவைகளினுண்மையை யறியாத ஏழை மதியுள்ளார் தங்கள் கஷ்டார்ஜிதங்களைக் கொடுப்பது மன்றி, தற்சுக நஷ்டா பிரயோஜனத்தைப் பெறுவது நயவஞ்சகமன்றோ ? இந்த சரித்திரத்தை ஆதியோ டந்தமாயும் சாக்ஷியுக்தி யனுபவமாயும் விசாரித் துணர்வாராகில் கல்லும் கரைந்துருகுமன்றோ? ஐயையோ! இயமனே தோட்டியல்லது புலையனாக அவதரித்து வந்து வாங்கினானென்றால் நமது இந்து தேச இதிகாச புராணாதி