பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

157



சுருதிகள் மூலமாய் நமக்கு இரண்டு இய மனுண்டெனத் தெரியவருகின்றது. அதெவ்வாறெனில், முதல் இயமன் சுவாயம்பு மனுவென்றும் இரண்டாவது இயமன வைச்சுத மனுவென்னும் இந்த இரண்டாவது இயமனே தற்காலம் எமலோகத்தில் அரசு செய்கிறானென்றும், அவன்தான் நம்மிந்துக்களில் பாவஞ் செய்யப்பட்டவர்களைத் தண்டித்து ஆக்கினைச் செய்கிறானென்றும், இதிகாச புராணங்கள் முறையிடுகின்றதுந் தவிர, இவன் பூர்வத்தில் சக்கர வர்த்தியாய் அரசாண்டானென்றும், இவனாலேயே மநுநீதி ஏற்பட்ட தென்றும், சொல்லுகின்றது. இவ்வண்ணமே அநேக புலவர்களும் பிரசங்கிகளும் பேசி வருகின்றார்கள் ஆகையால் இவ்விரண்டு எமன்களில் தோட்டியுருவெடுத்து வந்து அரிச்சந்திரனை வாங்கினவன் சுவாயம்பு மனுவெனும் எமனா? அல்லது வைச்சுத மனுவெனும் புதிய எமனா? பழைய எமனெனில், அவன் போன கதியென்ன? புது எமனெனில், அவன் எக்காலத்தில் வந்தான்? அவனரசாண்டது அரிச்சந்திரனுக்கு முந்தியா? பிந்தியா? இதுவுந்தவிர (புதிய எமனா? பழைய எமனா? எனும் பழமொழி) மார்க்கண்டனுக்காக ஓர் எமன் சிவன் காலால் உதைபட்டு விழுந்து கிடந்ததாகவும் அந்த பாரத்தைச் சுமக்க முடியாதென்று பூமிதேவி சிவனிடத்தில் வந்து புலம்பினதாயும் சிவன் எழுப்பினதாயும் எழுதியிருக்கின்றதே அவன் எந்த எமன்? பழைய எமனா? புது எமனா? இவ்விரண்டில் ஒருவனைக் குறிக்கில் இவ்விரண்டும் மனுக்களும் சதுர்யுகத்துக்கு முந்தியும் ஜலப்பிரளயத்திற்கு முந்தியுமே சிவனிடத்திலிருந்து என்றும் பதினாறு வயதாய் இருக்கும் படியான வரம் வாங்கிக் கொண்டிருந்ததாயும் அக்காலத்தில் ஜலப்பிரளயம் வந்து உலகம்யாவும் அழிந்து விட்டதாயும், தான் ஒருவனே அழியாதிருந்ததாகவும், ஜலம் எங்கும் பரவி போனபடியால் தான் மகாமேரு பர்வதத்தின் உச்சியில் ஏறிக்கொண்டிருந்ததாயும் அப்போது மகா விஷ்ணுவானவர் ஆலிலையில் பள்ளிகொண்டு பிரளய ஜலத்தின்மேல் அசைவாடிக் கொண்டே தான் இருக்கும் இடத்திற்கு வந்து தன்னை கூப்பிட்டு அவர் வாயைத் திறந்து அதற்குள் நுழைந்து கொள்ளும்படி சொன்னதாயும், அதே பிரகாரம் மார்க்கண்டர் மகாவிஷ்ணுவின் வாயில் நுழைந்து பார்த்தபோது இவ்வுலகமும் இவ்வுலகத்திலுள்ள பொருட்கள்