பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

க. அயோத்திதாஸப் பண்டிதர்



யாவுமிருந்த தாயும், பாரதம் ஆரண்ய பர்வதத்தில் தர்மராஜனுக்கு போதித்து வருவதை யாவரும் வாசித்திருக்கக்கூடும். ஆம், அது மெய்யெனில், இந்த மார்க்கண்டனால் உதைப்பட்ட எமன் மேற்கூறிய இரண்டு எமன்களில் ஒருவனு மல்லவென்றும், இவர்களுக்கு முன்னிருத்த மூன்றாம் எமனென்றால் சாஸ்திரங்களில் மூன்று எமனுண்டென்று குறிக்கவில்லை ஒருக்கால் இவ்வளவு எழுதிய பெரியோர்கள் அதை எழுத மறந்துவிட்டனர் போலும். ஆகையால் வாசிக்கப்பட்டவர்கள் இரண்டுடன் மூன்றாய்ச் சேர்த்துக்கொண்டு வாசிக்கவேணு மென்றாலும், இந்த மார்க்கண்டன் எமனுக்குப் பயந்து ஒவ்வோர் சிவஸ்தலங்களாய்ச் சுற்றிப் பூசித்துக்கொண்டு வருங்காலத்தில் இராமேசுரத்துக்கு வந்து இராமலிங்கத்தைப் பூசித்ததாய் சரித்திரங் கூறுவதுந் தவிர, இந்த மார்க்கண்டனே ஸ்ரீ இராமர் பூஜித்த இராமலிங்கமே என்று தன் வாக்கால் சொல்லியிருக்கின்றபடியால் இதைச் சற்று ஆராயுங்கால், இந்த மார்க்கண்டன் என்றும் பதினாறு வயது சிவனிடத்திலிருந்து பெற்றபின் ஜலப்பிரளமாய் அதற்கு ஏறக்குறைய 39,99,000 வருடத்துக்கு அதாவது திரேதாயுகக் கடையில் அவதரித்த இராமன், இராவண சம்மாரஞ் செய்து வரும் போது வழியில் மண்ணைப் பிடித்து வைத்து பூசித்த படியால் அது லிங்கமாய்விட்டதாயும் அன்று முதல் அதற்கு இராமலிங்க மென்று பேருண்டானதாயும், சாத்திரங்கள் முறையிடுகின்றதே! அப்படியிருக்க மார்க்கண்டன் இராமலிங்கத்தைப் பூசித்தானென்று சொல்வது பொருந்துமோ? மூன்றாம் எமனென்பது பொருந்துமோ? இது நிற்க.

கேளும் எமது பிரிய சகோதரர்களே! அரிச்சந்திரன் தோட்டிக்கு அடிமைப்பட்டு சுடலை காத்தான் என்று நியாயமின்றி நிட்சயப்படுத்தினாலும் இந்த இந்திய தேசத்திலுள்ள பிரம்ம, ஷத்திரிய, வைசிய, சூத்திரர் யாவரும் அங்கீகரிக்க வேண்டிய தல்லவோ? அப்படி மேற்குறித்த மூவரும் அங்கீகரியாது சூத்திரர் மாத்திரம் சுடலையண்டை யிருக்கும் அரிச்சந்திரனைச் சுற்ற வேண்டுமென்றும், அவனிடத்தில் சில விருத்தாந்தங்களைச் சொல்லி சில கிரியைகள் நடத்த வேணுமென்ற வேதப்பிரமாண முண்டோ ? சத்தியம் யாவருக்கும் பொதுவன்றோ! அப்படி மேற்குறித்த மூவரும் அங்கீகரியாமல், சூத்திரர் மாத்திரம் அங்கீகரிக்க வேண்டு மென்னுங்