பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

159



கற்பனை யேன்? அதற்கு காரணம் யாதேனு மிருக்கவேண்டும். ஆகையால் அவ்வரிச்சந்திரனுடைய வர்த்தமானங்களை யறிவதற்கு பூர்வ பாலிகிரந்தங்கள் மூலமாகத்தான் உண்மையை யுணரவேண்டுமே யல்லாது, வேறு நம் மிந்து தேசத்திற் கிடைப்பது மிக அருமையாயிருக்கும். ஏனெனில், கலியுகாதி 2685 அல்லது கி.பி. 344- அல்லது ஆங்கிலேய ஆண்டுகளுக்கு முன் 315-ம் வருடத்தில் பட்டத்துக்கு வந்தவனும், சந்திர வமிசத்து மூல புருஷனுமாகிய சந்திரன் அல்லது சந்திரா என்னும் அரசன், இவன் காலத்திலிருந்து இவனுக்குப் பின் பட்டத்துக்கு வந்த அரசர்களுக்கெல்லாம் சந்திரா என்றே நாமதேயம் வழங்கி வந்தது. இவர்கள் மதம் புத்த மார்க்கம். இந்த அரசர்கள் காலத்தில்தான் இந்தியாவிலிருந்து தேசம் முழுவதும் புத்த மார்க்கம் பரவினது. இந்த சந்திர பரம்பரையில் கடை அரசன் தான் அரிச்சந்திரனென்று குறிக்கப்பட்டவன். இவனுக்கு அரிச்சந்திரனென்று ஏன் குறிக்கப்பட்டதெனில், இவன் அரசாண்டு கொண்டி ருக்கும் காலத்தில் உஜ்ஜினி என்னும் பட்டணத்தில் ஒருவன் ஏற்பட்டு அநேக மனிதர்களை தன்வசப்படுத்திக்கொண்டு சந்திரன் என்னும் அரசனுக்கு விரோதமாய்த் தான் சூரிய னென்னும் பேரை வைத்துக் கொண்டு அரசாட்சி செய்து வந்தான். இவனுக்குச் சரித்திரத்தில் விக்கிரமாதித்தனென்று குறித்திருக் கின்றது. அது ஏன் அப்படி குறித்தார்களெனில் இவன் காலத்தில்தான் பஞ்சாங்கம் 2 ண்டானபடியினால் அந்தக் கணக்கின்படி பார்த்க்கில் இவன் பிறந்த வருடம் விக்கிரம் வருடமாய் இருந்த படியால் விக்கிரமனென்றும், இவன் பெயர் சூரியனான படி யால் ஆதித்தனென்றும் சேர்த்து விக்கிரமாதித்த னென்று குறித்தார்கள். இவன்தான் சூரிய வமிசமென்னும் பரம்பரையை உண்டு பண்ணினவன். இவன்தான் சூரிய வமிசத்து மூல புருஷன். இவன்தான் சூரியன் இதைவிட வேறு கிடையாது இவனுக்கு ஆரியனென்றும், அரிஎன்றும் இராமனென்றும் வைச்சுதமனுவென்றும் நாமதேயங்க ளுண்டென அநேக சாஸ்திரங்கள் மூலமாய் அறியலாம். இந்த அரசன் சந்திரனென் னுய் அரசனுக்கு நேர்விரோதியாய்ச் சூரிய னென்னும் பெயர் வைத்துக் கொண்டு சந்திர வமிசத்துக்கு பதில் தன் பட்டணத்தி லுள்ளவர்களை யெல்லாஞ் சூரிய வமிசத்தவரென