பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

160 க. அயோத்திதாஸப் பண்டிதர் மாறுபாடான ஏற்பாடு செய்ததுந் தவிர பூர்வ சந்திர வமிசத்தவர் அநுஷ்டித்து வந்த புத்த மார்க்கத்திற்கு பதில் மும்மூர்த்திகள் மதமெனும் ஓர் கற்பனா ஏற்பாட்டை யுண்டு பண்ணி அதைத்தான் பட்டணத்துக்குடிகளெல்லாம் அநுசரித்து வரும்படி யாயும் ஆக்கியாபித்து வந்தான். இந்த அரசனால் ஏற்பட்ட கற்பனா மதத்திற்கு ஆதித்த மதமென்றும், சூரிய மதமென்றும், அரிமதமென்றும், ஆரிய மதமென்றும், மும்மூர்த்தி மதமென்றும் நாமதேயங்களை வழங்குகின்றன. இந்த சூரியனென்னும் அரசனும் இவனால் ஏற்பட்ட ஆரிய மதம் அல்லது சூரிய மதம் அல்லது அரிமதமென்னுங் கற்பனாக்கட்டும் ஏற்பட்டது கலியுகாதி 3044 அல்லது கி.பி. 503 அல்லது ஆங்கிலேய வருடம் 56-க்கு முந்தியென்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆகையால், அதற்கு முந்தி சூரிய வமிசங் கிடையாதென்றும், மும்மூர்த்தி யெனுங் கற்பனா மதங் கிடையாதென்றும் யாவரும் பிரத்தியஙr மாய் அறியலாம். கேளும் எமது பிரிய சகோதரர்களே! மேற்கூறிய வருடத்தில் வெளிவந்த சூரியன் ஆதித்தன் ஆரியனென்னும் அரசன் இவனுக்கு முந்தி அயோத்தியாவில் அரசாண்டிருந்த சந்திரனென்னும் அரசன் பேரில் விரோதமுடையவனாய் அந்த சந்திர பரம்பரையை அழித்து தன்னால் ஏற்பட்ட மும்மூர்த்தி மதம் அதாவது அரிமதம் அல்லது சூரிய மதம் அல்லது ஆரிய மதம் அல்லது ஆதித்த மதத்தை விருத்தி செய்யவேண்டு மென்னுங் கொடிய வைராக்கிய புருஷனாயிருந்தான். இவன் மிகவுஞ் சமர்த்தனும் தைரியமு முள்ளவனானபடியால் இவனுக்கு வாகு வல்ல பத்தால் வீரவாகு என்றும் பெயருண்டு. இது இவ்வாறி ருக்க சந்திரனென்னும் அரசன் அரசாட்சி செய்யுங் கால் இவன் பெளத்தனானபடியால், தனக்கு விரோதமாய்ச் சூரியனென்று பெயர் வைத்துக்கொண்டு, புத்த மார்க்கத்துக்கு விரோதமாய் உண்டாக்கிய மூம்மூர்த்தி மதமெனும் கற்பனா மதத்தைப்பற்றியுஞ் சதா மனவருத்தமடைந்தது தவிர, தன்னைப்பார்க்கிலும் மிகவுஞ் சமர்த்தனாகவும், மகாதந்திர முடையவனாகவுஞ் சூரியனெனும் அரசனிருக்கின்ற படி. யால், அவனால் தன்னரசு க்ஷணிக்கப் பட்டு கொடிய துன்பத்தை அனுபவிக்கும்படி பாய் நேரிடு மென்று இரவும் பகலுந் துலையா வியாகூலப்பட்டு தன்