பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

161



மந்திரியுடன் நினைவே கனவாகச் சொல்லிக்கொண்டிருந்தான். இப்படி யிருக்குங் காலத்தில், நூதன மாய் ஆரியனெனும் பெயரை வைத்துக்கொண்டு ஆரிய பரம்பரை யென்னும் வமிசத்தை உற்பத்தி செய்த அரசன் பூர்வ சந்திர பரம்பரையை யும் புத்த மார்க்கத்தையும் அழிக்க வேண்டு மென்று இயமத்தைச் செய்ய ஆரம்பித்தான். அதாவது பூர்வத்தில் நரபலி ஆடு, மாடு, குதிரை முதலிய பலிகளை செலுத்தி யாகத்தை மனிதர்கள் நடத்தி வந்ததை புத்தர் அவையாவும் சுத்தப் பொய்யென்றும் அதினால் யாதொரு நன்மையுங் கிடையாதென் றும் ரத்து செய்து விட்டபடியால், மனிதர்கள் அதைச் செய்யாது நீக்கிவிட்டு சுகஜீவிகளாயிருக்கும் போது மறுபடியும் அவைகளைச் செய்யவேண்டுமென்று இவ்வரசன் அதாவது சூரியன் ஆரம்பித்து, தானே அந்த இயமக்கிரியைகளுக்கு மூல புருஷனாயும், பிணங்களைச் சுடக் கூடாதென்னும் புத்த ஏற்பாட்டிற்கு விரோதமாய்ச் சுடவேண்டுமென்று கட்டாயப் படுத்தப்பட்டவனுமாயிருந்த படியால், இவனுக்கு இயமன். அதாவது எ மனென்று குறிக்கப்பட்டதே தவிர வேறல்ல. இவ்வித மாறுபாடான ஈமக்கிரியைகளை ஏற்படுத்தி நடத்திவரும் அரியென்னுஞ் சூரிய அரசன். சந்திர அரசனைப் பார்க்கிலும் மிகவும் சமர்த்தும் தந்திரமும் பொருந்தினவனா யிருந்த படியால், அந்த ஈமக்கிரியை களை அங்கீகரித்தவனாய்ப் பூர்வ புத்த மார்க்கத்தையே யநுஷ்டித்து வந்தபடியால் இவனுக்கு அரிச்சந்திரனென்று பெயர் சூட்டப்பட்டதே தவிர வேறல்ல ஆயினும் அரியென்னும் அரசன் ஏற்பாட்டினால் உள்ளாந்திரத்தில் கிரியா தோஷ முண்டென்று மதித்த அரிச்சந்திரனுக்கு விரோதியாய் தனக்குண்மையும் பிரியமும் மான ஆரியபட்டன் அல்லது வசிட்டன் வராகமிரன் அல்லது விஸ்வாமித்திரனென்னும் இரண்டு சோதிட சாஸ்திரிகளில் னேவுதலினால் சந்திர னென்னும் புத்த மார்க்கத்தினரசன் ஆண்டிருந்த பட்டணத்தை வஞ்சித்து அரி, சூரியன், ஆதித்தன், ஆரியன், எமன், வீரவாகு என்னும் பெயருடைய அரசன் சந்திரனைக் கீழ்ப்படுத்திக் கொண்டு இவ்வரசரின் பெண்டு பிள்ளைகளை யும் பரம்பரை முழுமையும் தன் மும்மூர்த்தி மதத்தை யனுஷ்டிக்கும்படி பாயும், இந்த சந்திர பரம்பரையில் பிணங்களைச் சுடுகின்றது வழக்கமில்லாதிருப்பினும் கூட