பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

க. அயோத்திதாஸப் பண்டிதர்



வேண்டுமென்றும், தங்கள் பிணத்தை தாங்களே சுட வேண்டுமென்றும் பௌத்தரை மிகவும் கஷ்டப்படுத்தினான்.

கேளும் எமது பிரியா சகோதரர்களே! அரியென்னுமரசன் சந்திரன் பட்டணத்தை வஞ்சனையால் அபகரித்ததுமன்றி அவர்களை எவ்வளவு கஷ்டப்படுத்தின போதிலும் தங்கள் சத்திய மென்னும் புத்த மார்க்கத்தையும், பிரேதஞ் சுடக்கூடா தென்னு முறுதியையும் மாற்றாமலிருந்தபடியினாலேயே சத்திய கீர்த்தியென்றும் குறிக்கப்பட்டதே யொழிய வேறல்ல. இதற்குச்சாக்ஷி நாளதுவரையில் இந்த பரம்பரையானவர்கள் யாகாதி கிரியைகளைச் செய்யாமலும், பிணத்தை சுடாமலும் அரியென்னும் அரசனா லேற்படுத்தின வேதானுஷ்டானங் களின்மேற் கவலையில்லாமலும், அதைச் செய்யப்பட்ட பிடங்களுக்கு போகாமலும், சுத்தப் பொய்யான கற்பனையால் ஏற்பட்ட. வேத கோஷ்டங்கள் செவியிற் படாமலும், (தாங்கள் சற்குருவின் திருவாக்கின் பிரகாரம் இப்பெரிய உலகத்தை யெல்லாந் தாங்கி நிற்கின்ற வஸ்து யோகமென்று சகோதர ஐக்கியத்துடனே மிருகம் பக்ஷி முதலியவைகளை பட்சியாதிருக் கின்றதே கண்காட்சியாயிருக்கின்றது. இப்பால் சந்திரா யென்னப்பட்ட அரசன் மனைவியாகிய சந்திரவதியும் தன் குமாரன்லோகனும், பிராமணன் வீட்டில் அடிமைத்தொழில் செய்ததாக கூறுவது நாளதுவரையில், அதாவது கலியுகாதி 3044 கி.பி. 503 ஆங்கிலேய ஆண்டுக்கு முந்தி 56 வருடத்திலிருந்து அந்த பரம்பரைப் பெண்கள் தலைமுறை வழுவாது சாணந் தெளிக்கவும், முட்டை தட்டவும், நெல் குத்தவுமான அடி. மைத் தொழிலை இக்காலத்திலுஞ் செய்து வருவதே கண்காணி யன்றோ ? இந்த சந்திர அரசனுடைய பாலகனையும் மாடுகன்று மேய்த்துக்கொண்டு வரும்படியாகவும், தற்பைகொய்து கொண்டு வரும்படி செய்ததைப்போலவே அந்த பரம்பரை பிள்ளைகள் நாளதுவரையில் மாடுகன்று மேய்த்துக்கொண்டு வீடு வரும் போது தற்பைப்புல்லு கட்டிக் கொண்டு வந்து வீடு சேர்கிறது ங் கண்காஸி யல்லாவா? இந்த அரிச்சந்திரன் இயமனென்னும் புலையானுக்கு அடிமைப்பட்டு தானும் புலையனாய் பிணஞ்சுட்டதாய்ச் சொல்லுகின்ற படியால் இக்காலத்தில் தாங்கள் பிணத்தை மாத்திரஞ் சுடாது அயல் பிணத்தைச் சுடும்படிக்கான காரியத்தி லீடுபட்டு ஜீவனஞ்