பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முகவுரை

முற்காலம் இந்தியாவில் குடியேறி, தற்காலம் பிராமணர், வேதியர், அந்தணர், இருபிறப்பாளர், ஸாஸ்திரி, பூதேவர் என்று பலவித மரியாதைப் பெயர்களோடு, வழக்கி வாழ்ந்து வரும் ஒரு சிறு கூட்டத்தார்களாகிய பாரசீக தேச சோம்பேறிகளுக்கே மறைமுகத்தோரென்று புகழ்ந்து, அவர்களின் பாதாரமே துணை என நம்பி மோசம் போய்க்கொண்டிருக்கிறார்கள். பிராமணர்களின் துர்போதனையால் எழுதப்பட்ட ஒவ்வொரு நூல்களும், தங்களை யுயர்த்தி, இந்திய பூர்வக் குடிகளாகிய பவுத்தர்களைத் தாழ்த்திக் கூறிவைத்துள்ளது கற்றார்க்குக் கைக்கண்ணாடியாகும். எத்தேசத்திலாயினும் ஒரு பவுத்தன் தலை சிறந்து குடிகளிடத்து அன்பு பாராட்டி வருவானாயின். அதனை யறிந்த பார்ப்பனர்கள் தங்கள் குலத்தவர்களை அல்லது காட்டு மனிதராகிய சூத்திரர்களை (இந்துக்களை) ஒருங்கே சேர்த்து வந்து (அவதாரஞ் செய்து) அவனைக் கெடுத்து, அந்நாட்டில் தங்களது பிராமண மதத்தைக் கைக்கொள்ளச் செய்து வருவார்கள். வந்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதை உற்றுணர்தற்கின்றி பார்ப்பன படுமோச புராண இதிகாசங்களில் கவனஞ் செலுத்தி, ஆரியர்கள் மெய்யான தேவர்களென்றும், பிராமணர்களென்றும் அவர்களுக்குப் பற்பல உபகாரங்களும், தங்கள் சகோதரர்களாகிய பவுத்தர்களே பார்ப்பனர்களின் பகைவரென்றும், ராக்ஷசரென்றும், இவர்களுக்கு கணக்கற்ற அபசாரங்களும் செய்துவருகின்றார்கள். உண்மையாக பிராமண நிலை இருந்தால், அதை எவனாவது ஏற்று அதின்படி, சீலத்தில் நிலைத்து பிராமணனென்று வெளிவரப்படாதோ! அப்படி வந்தால் பிராமணனாகானோ? ஆகுவான் அப்படியிருக்க ஒரு குலத்தானே பிராமணன். மற்றவர்கள் இல்லை என்றால், வேதமோதுவதாலன்றி, ஜாதியால் பிராமணன் உண்டாகுவானோ? இல்லையே. தங்கள் சகோதரர்களாகிய பெளத்தர்களைக் கொல்வதுதானோ? பிராமண மத பிராமண நிலை? பிரம்மாவின் முகத்திற் பிறந்தவனுக்கே இந்த மூட புத்தியுண்டானால், பிரம்மாவின் கை, துடை, கால் முதலிய பாகங்களில் பிறந்தவனுக்கு இன்னம் எவ்வளவு முட்டாள் புத்தியுண்டாகாமல் போகுமென்பதை வாசகர்கள் தெரிந்து