பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

க. அயோத்திதாஸப் பண்டிதர்



ஷை பாயிரம் செய்.2

ஆயுங் குணத்தவ லோகிதன் பக்க லகத்தியன்கேட் டேயும் புவனிக் கியம்பிய தண்டமி ழீங்குரைக்க

நீயு முளையோ வெனிற்கருடன் சென்ற நீள்விசும்பி லீயும் பறக்கு மிதற்கென்கொலோ சொல்லு மேந்திழையே

சிலப்பதிகாரம் காட்சிக்காதை 25, வரி66

தண்டமிழாசான் சாத்தனஃதுரைக்குந்

சகல விலக்கணங்களிலும் சாற்றுதற்குரிய சாத்தன் வந்தான். சாத்தன் சென்றானென்னும் இலக்கண உதாரண வாக்கியங்களைக் காணலாம்.

சிவஞான யோகீஸ்வரர் ஞானத்திரட்டு (வீர. பதிப்புரை. பக்.4)

இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவ ரியல்வாய்ப்ப இருமொழியும் வழிபடுத்தார் முநிவேந்த ரிசைபரப்பும் இருமொழியு மான்றவரே தழீஇனா ரென்றாலிங் கிருமொழியு நிகரென்று மிதற்கைய முளதெயோ.

சகடபாஷையாம் சமஸ்கிருதத்தையும், திராவிட பாஷையாந் தமிழையும், புத்தபிரான் இயற்றி பாணினியார் வசமும் அகஸ்தியர் வசமுமளித்து, திரிபீடவாக்கியம் திரிபேத வாக்கியமென வழங்கிவந்த சுருதி வாக்கியங்களரம் ஒலி வடிவை வரிவடிவில், பதித்து, சகலர் மனதிலும் பதியச் செய்தார். ஞானபாகையாம், இதய சுத்தத்தால் மெய்யறம், மெய்ப்பொருள், மெய்யின்பந் தோன்றி பரிநிருவாணமுறும் வீடுபேற்றை நான்காவது பேதமொழியாகக் கொண்டு நான்கு மறைமொழியென்றும். நான்கு வேதவாக்கியங்களென்றும் வழங்கலாயினர்.

முதன் மும்மொழியையே முதன் மொழியென்றும் வரையாக் கேள்வியென்றும் வழங்கி, வரிவடிவாம் அட்சரங்களேற்பட்டபோது அவற்றை ஆதிபீடமென்றும், ஆதிநூலென்றும், ஆதிவேதமென்றும் வழங்கலாயினர்.