பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி ஒன்று 13 சூடாமணி நிகண்டு தொகுதி 10). செய்.21, 22. ஆதி நூலெழுதாக் கேள்வியாரண மொத்துசாகை யேதமில் சுருதிதன்னோடிருக்கிவை யேழும் வேதம் வேதநூற் பொருளினாமம் விதித்திடு ஞானபாகை ஆதியாங் கரும்பாகை அர்த்த பாகையுமாமென்ய ஷ நூல். மெய்தெரி யாரணந்தான் வேதத்தின் ஞானபாகை மையலுட் பொருளினாம மற்றுப நிடத மென்ப வைதிக வேதமுற்ற மார்க்கமே பார்க்குங்காலை பையமாலிருக்கினோடு பிடகமே யாதிவேதம். பாபஞ் செய்யாதிருங்கோளென்னும் வேதவாக்கியத்தின் உட்பொருளே ! கன்ம பாகை யென்றும், அவையே மெய்யற விசாரமும், நன்மைக் கடைபிடியுங்கோளென்னும் வேதவாக் கியத்தின் உட்பொருளே அர்த்த பாகையென்றும், அவையே மெய்ப்பொருள் நிலையும், இதயத்தை சுத்தி செய்யுங்கோளென் னும் வேதவாக்கியத்தினுட் பொருளே ஞான பாகையென்றும், அவையே மெய்யின்ப சுகமாதலின் வீடுபேறென்றும், பேரின்ப நிலையென்றும், முத்தியென்றும், சாந்தி யென்றும், நிருவாண மென்றும் வகுத்திருக்கின்றார்கள். கன்ம பாகை, அர்த்த பாகை, ஞானபாகையாம் வேதத் தினுட் பொருளை விளக்குவான் வேண்டி, அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பேதவாக்கியங்களாக வரைந்து அவற்றையே நான்கு வேதவாக்கியங்களென்றும் நான்மறை யென்றும் வழங்கலாயினர். திரி பீடமென்றும், சதுர்மறையென்றும், பாலி பாஷை யிலும், சமஸ்கிருதத்திலும் வழங்கியுள்ள முதனூலுக்கு, திராவிட பாஷையில் திருவள்ளுவ தேவரியற்றிய வழிநூலாந் திரிக் குறளுக்கு தமிழ் வேதமென்னும் பெயரையுமளித்துள்ளார்கள். நான்கு பேதவாக்கியங்களும் மேலுமேலும் தெளிந்துக் கொள்வதற்கு, உட்பொருளாம் உபநிட்சயார்த்தங்களை பேத வாக்கியம் ஒன்றுக்கு எட்டு உபநிட்சயார்த். தங்களாக, நான்கு பேதவாக்கியங்களுக்கும் முப்பத்திரண்டு தபநிட்சயார்த்தங் களை வகுத்துள்ளார்கள். அவைகளுக்கே பாலி பாஷையில்