பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

க. அயோத்திதாஸப் பண்டிதர்



உபநிடதங்களென்றும், உபநிஷத்துக்களென்றும், திராவிட பாஷையில் உபநிட்சய அருத்தங்களென்றும் வகுத்திருக்கின் றார்கள்.

புத்தபிரானோதிய மும்மொழி விளக்கத்தை முதனூ லென்றும், ஆதிநூலென்றும் வழங்கி வந்தார்கள். நன்நூல் பாயிரம் செய். 6 விளையினீங்கி விளங்கிய வறிவின் முனைவன் கண்டது முதனூலாகும்.

ஆதிநூலென்றும் முதனூலென்றும் வழங்கிய திரிபீட வாக்கியங்களையே வேதநூலென்றும் வழங்கி வந்தார்கள்.

திவாகரம் ஒலிபற்றிய பெயர் தொகுதி ஆதிநூலென்பது - வேதநூற் பெயரே. உபநிடதம். இத்தகைய வேதநூலின் உட்பொருணுட்பங்களை விளக்கிக் காட்டும் வாக்கியங்களுக்கு உபநிடதங்களென்று வழங்கலாயினர். திவாகரம் ஒலிபற்றிய பெயர் தொகுதி உபநிடதம் வேதத்தினுட் பொருணுட்பம் வேதவாக்கியம் ஒன்றுக்கு எட்டு உபநிடத உட்பொரு ணுட்பங்களைக் கூறி, நான்குவகை பேதவாக்கியங்களுக்கும் முப்பத்திரண்டு உபநிடத உட்பொருணுட்பங்களைக் கூறியுள் ளார்கள். 1வது கன்ம பாகை அஷ்டகம் 1. அன்னிய சீவப்பிராணிகளை வீண் கொலைச் செய்தலா லுண்டாகும் கேடுகளை விளக்கிக் காட்டும் வாக்கியங்களுக்கு மெளண்டரீக உபநிடதமென்றும், 3. அன்னியப் பிராணிகளின் மீது வீண் கோபங் கொண்டு அவைகளைத் துன்பஞ் செய்தலால் உண்டாகுங் கெடுதிகளை விளக்கிக் காட்டும் வாக்கியங்களுக்கு காலாக்கினி உபநிடதமென்றும்,