பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

15



3. அன்னியரைக் கெடுக்கவேண்டுமென்று தீங்கு நினைத்தலால் தனக்குண்டாகும் கேடுகளை விளக்கிக் காட்டும் வாக்கியங்களுக்கு முண்டிர உபநிடதமென்றும்,

4. அன்னியர் மனம் புண்பட வீண் வார்த்தைப் பேசுதலா லுண்டாகும் கேடுகளை விளக்கிக் காட்டும் வாக்கியங்களுக்கு சுரோர்த்தாக்கினிய உபநிடதமென்றும்,

5. அன்னியர் பொருட்களை அவர்களனுமதியின்றி யபகரித்தலால் உண்டாகுங் கெடுதிகளை விளக்கிக் காட்டும் வாக்கியங்களுக்கு காத்தியாயன உபநிடதமென்றும்,

6. அன்னியர் தாரத்தை அபகரித்தலால் உண்டாகும் கேடுகளை விளக்கிக் காட்டும் வாக்கியங்களுக்கு ஆர்ணிக பகுவு பஞ்சக உபநிடதமென்றும்,

7. அன்னியர்களை வஞ்சித்துத் துன்பப்படுத்தலாலுண் டாகும் கேடுகளை விளக்கிக் காட்டும் வாக்கியங்களுக்கு பாராக உபநிடதமென்றும்,

8. அன்னியர்களறிவை மதுவூட்டி மயங்கச்செய்த லாலுண்டாகும் கேடுகளை விளக்கிக் காட்டும் வாக்கியங்களுக்கு சுராபாநீய உபநிடதமென்றும் எட்டு உட்பொருளை விளக்கியுள் ளார்கள்.

2வது அர்த்த பாகை அஷ்டகம்

1. அன்னியர்களுக்குண்டாகுந் துன்பங்களையகற்றி தண்மையடையச் செய்தலாலுண்டாகும் நன்மைகளை விளக்கிக் காட்டும் வாக்கியங்களுக்கு நாராயண உபநிடதமென்றும்,

2. அன்னியருக்கில்லா பொருளீந்து ஆதரித்துத் தன்னைப் போல் சுகம் பெறக் கருதிச் செய்யும் நன்மையாலுண்டாகும் சுகத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு பிரசபிந்து உபநிடதமென்றும்,

3. அன்னியர்களைத் தன்னைப்போல் நேசித்து ஆதரிக்குஞ் செயலால் உண்டாகும் நன்மைகளை விளக்கிக் காட்டும் வாக்கியங்களுக்கு தேஜோபிந்து உபநிடதமென்றும்.