பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

க. அயோத்திதாஸப் பண்டிதர்



5. தானே தோன்றுவதும் கெடுவதுமாகிய பிறப்பிறப்பு மனதைத் தோன்றாமலும் கெடாமலும் அலையற்ற கடல்போல் அமர்ந்த நிருவாண சுகத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங் களுக்கு பாஷ்கர உபநிடதமென்றும், 6. தனக்குள்ளெழும் மரணபயம் ஜநந பயமற்று கலங்காமல் நிற்கும் அசைவற்ற தீப நிருவாண சுகத்தை விளக்கிக்காட்டும் வாக்கியங்களுக்கு சௌனகீய உபநிடதமென்றும், 7. தன்னுள் தானாய் திரளும், சாந்தம், ஈகை, அன்பென்னும் உண்மை உருவின் பேரின்ப நிருவாண சுகத்தை விளக்கிக் காட்டும் வாக்கியங்களுக்கு கிபுரோட்சய உபநிடத மென்றும், 8. தானே தானே தசநாதமுற்று சுயம்பிரகாச உருவ அகண்ட பார்வையாம் சதா நித்திய சித்தின் நிருவாண சுகத்தை விளக்கிக் காட்டும் வாக்கியங்களுக்கு சிரவாண உபநிடத மென்றும் எட்டு உட்பொருளை விளக்கியுள்ளார்கள்.

பிடகம்

உலகிலுள்ள துக்கங்களைக் கண்டு சகியாதவராய், சர்வ ஜீவர்களின் மீதும் அன்பு கொண்டு தர்ம மோதியவர் பகவன் புத்தரே! ஆதலால்தான் அவர் நூலை பிடகமென்று போற்றி வந்தார்கள். திவாகரம். ஒலிபற்றிய பெயர் தொகுதி நூலின் பெயர் பிடகந் தந்திரம் - நூலின் பெயரே புத்தவிரா னருளிய பிடகத்தையே நூலென்று வகுத்துள் ளார்கள். அந்நூல் ஆதியில் போதிக்கப்பட்டதாதலின் அதனை முத நூலென்றும், ஆதி நூலென்றும் வழங்கி வந்தார்கள். பிடகமென்னும் மொழி தோன்றிய காரணம் யாதென்பீரேல், முப்பேத வாக்கியங்களாகும் ஸப்பபாபஸ்ஸ அகரணம், குஸலஸ்ஸ உபஸம்பதா, ஸச்சித்த பரியோதபனங், ஏதங் புத்தான்ஸாஸன மென்னும் பாபஞ் செய்யாதிருங்கள் நன்மைக் கடைபிடியுங்கள், உங்களிதயத்தை சுத்திசெய்யுங்கோளென்பவை. இத்தேசப் பிராகிருத பாலி பாஷை வரிவடிவாம் அட்சரங்களின்றி ஒலிவடிவ சுருதியாய் உலக சீர்திருத்த ஆதிபீட வாக்கியமா