பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

19



யிருந்து கொண்டு அவைகளை பிடக வாக்கியங்களென்றும், புத்தர் வீற்றிருந்த கல்லால பீடத்திற்கு பீடிகையென்றும் வழங்கி வந்தார்கள். இத்தகைய ஆதி பீடமாகும் முதனூலாம் வேதத்தின் உட்பொருளினுட்பத்தையும், அதனந்தத்தையும் விளக்கிக் காட்டும் வாக்கியங்களுக்கு உபநிடத வாக்கியங்களென்றும், வேத அந்த வாக்கியங்களென்றும் வழங்கலாயினர்.

இவ்வேத வாக்கியங்களையும், வேதாந்த வாக்கியங்களையும், ஆராய்ந்து அருள் பெற வேண்டியவர்கள் காட்டிற்கும், நாட்டிற்கும் மத்தியில் இந்திர வியாரங்களைக் கட்டுவித்து இல்லறந்துறந்த மேன்மக்களாகும் அரஹத்துக்கள், பிராமணர், அந்தணரென்னும் விவேகமிகுந்த ஞானிகளிடம் பொன்னிற வாடையும் கரபோலு மேந்தி சீலந்தாங்கி சித்தி பெறல் வேண்டும்.

இந்திர வியாரமாகும் புத்த சங்கத்திற் சேர்ந்து மகடபாஷையில் சமணரென்றும், சகடபாஷையில் சிரமண ரென்றும், திராவிட பாஷையில் தென்புலத்தாரென்றும், புலன் தென்பட்டவர்களென்றும், வழங்கும்படியான விசாரணைப் புருஷர்கள் மகட பாஷையில் பஞ்சஸ்கந்தமென்றும், திராவிட பாஷையில் ஐம்புலனென்னும் படுத்தல், எழுதல், நடத்தல், அணிதல், தூய்த்தலாம், ஐங்கூறினுள், நினைத்தல், மறத்தல். அறிதல், அன்பு, ஆசை, பயம், மரணம், நிறை, பொறை, ஓர்ப்பு, மையல், கடைப்பிடி, வெறுப்பு, விருப்பு, உவப்பு, இரக்கம், நாணம், பயம், முநிவு, அழுக்காறு, அருள், பீடை, இன்பம், துன்பம், இளமை, முதுமை, இகல், வெற்றி, பொய்க்காப்பு, ஊக்கம், மறம், மதம் எனும் முப்பத்திரண்டு செயலுடைத்தாய உருவத்தை மகடபாஷையில் ஆன்மமென்றும், ஆத்மமென்றும், சகடபாஷையில் புருஷனென்றும், திராவிட பாஷையில் மனிதனென்றும், வழங்கி வந்தார்கள்.

இத்தகைய ஒருமை உருவகம் ஒன்றாகத் தோன்றினும் செயலால் உண்மெய்யும் தோற்றத்தால் புறமெய்யுமாக உடலுயிர் இரண்டென வகுத்துள்ளார்கள்.