பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

27



சுத்தவிதயத்தினின்று தன்னைப் பார்க்குங்கால் உனதென தென்னும் பின்ன பாபங்களற்று சர்வ வுயிர்களையும் தன்னுயிர் போல் பாதுகாக்கவும் உயிர்களால் யாதொரு துன்பம் தனக்கணு கினும் அவற்றிற்கு பிரதிதுன்பமளிக்காது காக்கும் குணத்திற்கு பிரம்மமென்று பெயர். பூமியை ஒர் மனிதன் கொத்திப் புழுதியாக்கி பண்ணையங் கலைக்கிய போதும். அஃது கொடுக்கும் பலனைக் கொடுத்து வருவது போல், மனிதனுள் பலரால் துன்பப்படினும் அவர் களுக்கு நற்பலனளித்தே வருவானாயின் அந்த சிரேஷ்ட செயலுக்கு பிரம்மனென்னும் பெயரையளித்திருக்கின்றார்கள். மச்சழனியார் ஞானம் நித்தமுநீ கத்மதாய் நின்று பார்த்தால் நின்தேகம் பிரம்ம மடா நீ தான் காண்பாய் சுத்தமுடன் சோதிமனக் கண்ணாலந்த சுருதிமுடி வானசுட ரொளியைக் கண்டால் பத்தியுள்ள தேகமது சுத்தமாச்சு பாலகனே யவமிருந்து பறந்து போச்சு வெற்றியுள்ள வஷ்டசித்துங் கைக்குள்ளாச்சு வேதாந்த புருவமதை மேவி நில்லே. மூன்று அருமொழிகளாம் பேதவாக்கியங்களின் பலனாகும் சுழிநிலையிற் காணும், சுயஞ்சோதியாம் தோற்றத்திற்கே சுருதி முடிவென்றும், வேதமுடிவென்றும், வேத அந்தமென்றும் கூறியுள்ளார்கள். இதுவே யதார்த்த வேதாந்தமாகும். இத்தகைய சாதனமுற்றவனே யமகாதகனென்றும், காலகாலனென்றும், மரணத்தை ஜயித்தோனென்றும் கூறியுள் ளார்கள். பாம்பாட்டி சித்தர். வேதப்பொருளின்னதென்றும் வேதங்கடந்த மெய்ப்பொருளைக் கண்டு மனமேவிவிரும்பி போதப்பொரு ளின்னதென்று போதனை செய்யும் பூரணசற்குருதான் கண்டாடாய்பாம்பே. திரிபேத வாக்கியங்களாகும் மூவருமொழியாம் பாபஞ் செய்யாதிருங்கள், நன்மைக்கடைபிடியுங்கள், உங்களிதயத்தை